முத்தம் கடந்து வாழ்வார்

முத்தம் கடந்து வாழ்வார்
Updated on: 
2 min read

‘கறந்த பால் மறு​படியும் மடி​யிலே புகாது; கரு​வாடு மறு​படியும் மீன் ஆகாது’ என்று காலஞ்​சென்ற அரசி​ய​லார் காளிமுத்து, அரசிழந்து சிறகொடிந்த தேசி​யக் கட்சி ஒன்​றுக்​குக் காட்​டிப் பேசிய உவமை வியப்​பைத் தந்​தது. பின்​னாளில் சித்​தர் பாடல்களில்,

கறந்த பால் முலைப் புகா; கடைந்த வெண்​ணெய் மோர்ப் புகா;

உடைந்து போன சங்​கின் ஓசை, உயிர்​களும் உடற் புகா;

விரிந்த பூ, உதிர்ந்த காயும் மீண்​டு​போய் மரம் புகா;

இறந்​தவர் பிறப்​பது இல்லை, இல்லை, இல்லை, இல்லையே

என்​னும் சிவவாக்​கியர் பாட்​டைப் படித்​த​போது​தான் எந்த மடி​யில் இருந்து காளிமுத்து அரசி​யல் கறந்​திருக்​கிறார் என்று புலப்​பட்​டது. படித்​து​விட்​டுப் பேசிய அரசி​ய​லாரும் இருந்​தார்​கள் என்​ப​தற்கு இது சான்று. இருக்​கட்​டும்.

யார் இந்​தச் சித்​தர்​கள்? ‘சித்​தர் முத்​தாந்​தத்து வாழ்​வார்’ என்​கிறார் சித்​தர்​மரபின் முதல்​வ​ரான திரு​மூலர். சித்​தர்​மரபின் முதல்​வர் அகத்​தி​யர் என்​றல்​லவா சிலர் சொல்​கிறார்​கள்? திரு​மூலரே முதல்​வர் என்​ப​தற்​குச் சான்​றாக மூவாயிரம் பாடல்​களால் அவரே எழுதிய திரு​மந்​திரம் இருக்​கிறது. அகத்​தி​யரே முதல் சித்​தர் என்​ப​தற்​குச் சான்​றாக யார்​யாரோ எழுதிய கதைகளை அன்றி வேறேதும் இல்லை. போகட்​டும். கதைகளை விட்​டுவிட்டு முத்​தாந்​தத்​துக்கு மீள்​வோம்.

Loading content, please wait...

X