

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூரில், மின்னல் தாக்கியதில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த நான்கு பெண்கள் அக்டோபர் 16இல் உயிரிழந்தனர். முன்னதாக, அக்டோபர் 6 இல் சென்னை பாடிக்குப்பம் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கைபேசியில் பேசிக்கொண்டிருந்த இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
கடந்த மார்ச் 11இல் உளுந்தூர்பேட்டை அருகே கீரனூரில் மின்னல் தாக்குதலால் இரண்டு பேர் பலியாகினர். மின்னல் தாக்குதல் மரணங்களின் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்துவருவது கவனிக்கத்தக்கது.