காட்டுயிர் படங்காட்டி ஆட்டன்பரோ

உயிரியலாளர்கள் கள ஆய்வு மூலம் கண்டறிந்த சில உண்மைகளை ஆட்டன்பரோ படமாக்கிக் காட்டினார்
காட்டுயிர் படங்காட்டி ஆட்டன்பரோ
Updated on
3 min read

திரைப்படம் தோன்றிய காலத்திலேயே காட்டுயிர் சார்ந்த படங்களைச் சிலர் எடுத்தனர். வேட்டையாடி ஜிம் கார்பெட் புலிகளைப் பற்றிச் சில ரீல்கள் படம் எடுத்ததாகப் பதிவுசெய்திருக்கிறார். படம் நமக்குக் கிடைக்கவில்லை.

பலர் இத்தகைய படங்களை எடுக்க முயன்றாலும், தொலைக்காட்சி தோன்றிய பின்னர்தான், சின்னத்திரையில் ஒருமுறை மட்டுமே காட்டப்படும் குறும்படங்களுக்கான தேவை ஏற்பட்டது. காட்டுயிர்ப் படங்களைப் பல நிறுவனங்கள் தயாரிக்கத் தொடங்கின. இந்தத் தளத்தில் நிகரற்று விளங்குபவர் டேவிட் ஆட்டன்பரோ.

கானகக் காட்சிகள்

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் பட்டம் பெற்ற ஆட்டன்பரோ, 1952இல் பிபிசியின் வானொலி நிகழ்ச்சிகளுக்காக இயற்கை சார்ந்த விவரண உரைகளை எழுதினார். ஆனால், காட்டுயிர்தான் தன் வாழ்க்கைப் பணி என்று அவர் தீர்மானித்தது அவரது முதல் ஆப்ரிக்கப் பயணத்தின் போதுதான்.

வெப்ப நாடுகளின் பல்லுயிர் வளம், புற உலகின் செழுமை அவரை வெகுவாக ஈர்த்தன. பிபிசி தொடக்கத்தில் தயாரித்த காட்டுயிர் சார்ந்த படங்கள் உயிர்க்காட்சியகத்தில் உள்ள விலங்குகளைப் பற்றியவையாக மட்டுமே இருந்தன.

அவற்றுக்கு உரைகளை எழுதி ஆட்டன்பரோ தனது பணியைத் தொடங்கினார். பின்னர், பிபிசி நிறுவனம் காட்டுயிர்களை அவற்றின் வாழிடத்திலேயே படமாக்கத் தொடங்கியது. இதற்கான அடிப்படை ஆய்வை ஆட்டன்பரோ மேற்கொண்டு உரைகளை எழுதினார்.

இங்கு ஒன்றை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆட்டன்பரோ இந்தப் படங்களுக்குத் தேவையான உரைகளை எழுதி, பின் திரையில் தோன்றி வர்ணனையும் செய்தார். அவர் படம் எடுக்கவில்லை. அவருடன் எப்போதும் மூன்று பேர் கொண்ட படப்பிடிப்புக் குழு செல்லும்.

அவர்கள் எடுத்த படங்கள், தொகுக்கப்பட்டுத் தொலைக்காட்சியில் திரையிடப்பட்டன. முதன்முதலில் ஆட்டன்பரோ எழுதித் தயாரித்த படம் 13 பாகங்களாக ‘லைஃப் ஆன் எர்த்’ (Life on Earth) என்கிற தலைப்பில் பிபிசியில் ஒளிபரப்பானது. இதன் மூலம் அவர் உலகப் புகழ் பெற்றார்.

இந்தத் தொடருக்கு அவர் மேற்கொண்ட ஆய்வை அதே பெயரில் நூலாக 1979இல் வெளியிட்டார். புறவுலகுக்கும் அதில் வாழும் எண்ணற்ற உயிரினங்களுக்கும் இது ஒரு மகத்தான அறிமுகமாக அமைந்தது.

10 ஆண்டுகள் கழித்துக் காட்டுயிர் சார்ந்த ‘டிரையல்ஸ் ஆஃப் லைஃப்’ (Trials of Life) என்கிற இன்னொரு அற்புதமான தொடரைத் தந்தார். இதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக, 64 நாடுகளில் பயணித்து ‘பிளானெட் எர்த்’ (Planet Earth) என்கிற தொடரை வெளியிட்டார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in