

இருபதாம் நூற்றாண்டில் உலகெங்கும் மாறிக்கொண்டிருந்த அரசியல் சூழல்களில் உருப்பெற்ற விடுதலை இயக்கங்கள் பெரும்பாலும் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுத் தன்னாட்சி ஜனநாயகத்தை வலியுறுத்தின.
அந்த இயக்கங்களின் தலைவர்களில் பலர் தம்முடைய மக்களை காலனிய ஆதிக்கத்திலிருந்து மட்டுமல்லாமல், தங்களுடைய பிரதேசத்தில் நிலவிய பழமைவாதத்தில் இருந்தும் விடுவிப்பதற்கான வேலைகளைச் செய்தனர்.