பழங்குடியினர் பட்டியலில் குழப்பங்கள் தீரட்டும்

பழங்குடிக் குழுக்களின் அடையாளச் சிக்கல்கள் சமுதாயச் சான்று பெறுவதில் எதிரொலிக்கின்றன
பழங்குடியினர் பட்டியலில் குழப்பங்கள் தீரட்டும்
Updated on
2 min read

கன்னியாகுமரி மாவட்டம், தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை, அம்பாசமுத்திரம் வட்டங்கள் ஆகியவற்றைத் தவிர்த்துத் தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளில் வழங்கப்பட்டுள்ள 954 காணிக்காரர் / காணிக்கார் சமுதாயச் சான்றிதழ்களை ரத்து செய்வதற்குத் தமிழ்நாடு அரசின் சமூக நீதித் துறை உத்தரவிட்டிருக்கிறது. இத்தகைய சூழலில், தமிழ்நாட்டுப் பழங்குடியினர் பட்டியலை மீளாய்வு செய்வது காலத்தின் தேவை.

தமிழ்நாட்டில் நிலவரம்...

பட்டியல் சாதியினர் - பழங்குடியினர் (திருத்தச்) சட்டம் (Scheduled Castes and Scheduled Tribes Order (Amendment) Act, 1976 (No. 108 of 1976) மூலம் தமிழ்நாட்டில் பட்டியலிடப்பட்ட (நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட) 37 பழங்குடி இனங்களுள் 31 பழங்குடிக் குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் வசிப்பதாகவும், அவற்றுள் ஆறு பழங்குடியினங்கள் வாழ்விட எல்லை வரையறை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வாழ்விட எல்லை வரையறை செய்யப்பட்டுள்ள ஆறு பழங்குடியினங்கள் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே சமுதாயச் சான்றிதழ் பெற முடியும் என்கிறது அரசாணை.

தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், (பிரிக்கப்படாத) ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஒரே ஆட்சிப் பரப்பாகத் திகழ்ந்த சென்னை மாகாணமானது மொழிவழி மாநிலங்களாகப் பிரிந்தது. அதற்குப் பின்னர், தத்தமது மாநில ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாழ்ந்துவரும் பழங்குடிக் குழுக்களை மட்டும் தமது மாநில அட்டவணைப் பழங்குடியினர் பட்டியலில் இடம்பெறுமாறு அந்தந்த மாநிலங்கள் உரிய அரசாணை வெளியிட்டுள்ளன.

தமிழ்நாடு மட்டும் மொழிவழி மாநிலமாகப் பிரிந்த பிறகும் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதிகளில் வாழ்விடப் பரப்பைக் கொண்ட பழங்குடிக் குழுக்களுக்குத் தனது மாநிலப் பட்டியலில் இன்றளவும் இடம் அளித்துவருகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in