ஐ.நா.வில் ஒலிக்கட்டும் தமிழ்!

ஐ.நா.வில் ஒலிக்கட்டும் தமிழ்!
Updated on
2 min read

உலகளாவிய அமைதியையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கில் 1945ஆம் ஆண்டில் 51 நாடுகளின் உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டது ஐக்கிய நாடுகள் அமைப்பு (United Nations). அதன் தலைமையகம் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது.

ஐ.நா.வின் பல சிறப்பு நிறுவனங்களின் தலைமையகங்கள் ஜெனீவா (ஸ்விட்சர்லாந்து), வியன்னா (ஆஸ்திரியா), த ஹேக் (நெதர்லாந்து), பாரீஸ் (ஃபிரான்ஸ்), பான் (ஜெர்மனி), நைரோபி (கென்யா), பாங்காக் (தாய்லாந்து), டோக்கியோ (ஜப்பான்), ரோம் (இத்தாலி) போன்ற நகரங்களில் இயங்கிவருகின்றன.

அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்

உலக அமைதியைப் பாதுகாப்பது, வறுமை ஒழிப்பு, கல்வித் திறன் மேம்பாடு, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் எனப் பல்வேறு பணிகளை மேற்கொண்டுவரும் ஐ.நா.வின் அதிகாரபூர்வப் பயன்பாட்டு மொழிகள் - ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ரஷ்யன், சீனம், அரபு ஆகியவை.

ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் - போர்ச்சுகீஸ், ஜெர்மன், சுவாஹிலி, இந்தி, உருது, வங்காள மொழி, இந்தோனேசியன், துருக்கி மொழி, பாரசீகம் ஆகியவை.

ஒரு மொழி, ஐ.நா.வின் அதிகாரபூர்வ மொழிகளின் பட்டியலில் சேர்வதற்கு, அது குறைந்தது இரண்டு நாடுகளில் அதிகாரபூர்வ மொழியாக இருக்க வேண்டும். மேலும், அந்த மொழியை அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்க, உறுப்பினர் நாடு முன்மொழிய வேண்டும். அதன் பின்னரே ஐ.நா. பொது அவையும், அதிகாரபூர்வ மொழிகள் குழுவும் அதைப் பற்றிப் பரிசீலிக்க முடியும்.

தமிழின் சிறப்புகள்

உலகின் தொன்மையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பதைப் பல்வேறு ஆய்வறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. 1947-50இல் இந்திய அரசமைப்புச் சட்டம் உருவானபோது தமிழ் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றவுடன் இலங்கையின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகத் தமிழ்மொழியும் அங்கீகரிக்கப்பட்டது.

1956இல் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம், கர்நாடகம், கேரளம் பிரிக்கப்பட்டபோது, எல்லா நிலையிலும் சென்னை மாகாணத்தில் தமிழ் ஆட்சிமொழியாகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுச் செயல்வடிவம் பெற்றது.

1957இல் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து மலேசியா விடுதலை பெற்றவுடன் மலேசியாவின் பயன்பாட்டு மொழியாகவும் கல்வி மொழியாகவும் மலேசிய அரசால் தமிழ் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in