உள்ளாட்சி: நம்பிக்கை நிறைவேறட்டும்!

கிராமங்கள் வளரும்போதுதான் இந்தியா மேம்படும் என்று காந்தி கூறியதை மறக்கக் கூடாது
உள்ளாட்சி: நம்பிக்கை நிறைவேறட்டும்!
Updated on: 
2 min read

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி - உள்ளாட்சித் துறை சார்பில் அலுவலர்களை அழைத்து அமைச்சர் என்.ஆனந்த், ஒரு கலந்துரையாடலை அண்மையில் நடத்தினார். சென்னை, கோயம்புத்தூர், மதுரை என மூன்று இடங்களில் மண்டல மாநாடு என்கிற பெயரில் இது நடத்தப்பட்டது.

இந்த ஆட்சிக்கு உள்ள கனவு என்ன, அதை எப்படி நிறைவேற்றுவது, இன்று உள்ள நிர்வாகச் சூழலில் எப்படிச் செயல்பட வேண்டும் என அனைத்தையும் களத்தில் இருப்போரிடமிருந்து அறிந்து, அதற்குத் தக்க நடவடிக்கை எடுக்கலாம் என்பது இந்தக் கலந்துரையாடலின் நோக்கம்.

ஊழலை ஒழிக்க...

அந்த மாநாட்டில் உரையாற்றுவதைக் குறைத்துக் கொண்டு அலுவலர்களின் கருத்துகளைக் கேட்டுப் பதில் கூறுவதற்கு அதிகம் நேரம் கொடுக்கப்பட்டது. நிர்வாகத்தில் இருக்கும் சவால்கள், தங்கள் பணியில் யாரோ செய்த தவறுக்காகச் சந்தித்துவரும் பிரச்சினைகள் எனப் பல விஷயங்களை மூன்று மாநாடுகளிலும் அலுவலர்கள் முன்வைத்தனர்.

“மக்கள் வரிப் பணத்தில் மக்களுக்காக உருவாக்கும் ஒவ்வொரு திட்டத்திலும் ஒரு ரூபாய் ஒதுக்கப்பட்டால், உரியவரிடம் அந்த ஒரு ரூபாய் சென்று சேர்ந்துவிட வேண்டும்” என்பதை மூன்று மாநாடுகளிலும் அமைச்சர் தெரிவித்தார்.

Loading content, please wait...

X