நீர்நிலைப் பாதுகாப்பு: தமிழகம் உணர வேண்டிய பாடம்

வெள்ளப் பெருக்குக்குக் காரணம் இயற்கையா, அரசின் அலட்சியமா?
நீர்நிலைப் பாதுகாப்பு: தமிழகம் உணர வேண்டிய பாடம்
Updated on: 
3 min read

அக்டோபர் மூன்றாம் வாரத்தில் தொடங்கிய இந்த ஆண்டின் வடகிழக்குப் பருவமழை, தீவிரமடைந்த இரண்டு வாரங்களுக்கு உள்ளாகவே தலைநகர் சென்னையில் தொடங்கி, மாநிலத்தின் பல மாவட்டங்களை வெள்ளக்காடாக மாற்றியிருக்கிறது.

பெருமழையால் வெள்ளம் ஏற்படும்போதெல்லாம் இயற்கையின் சீற்றம் என்று சொல்லி அதன் பின்னால் ஒளிந்துகொள்வது ஆட்சியாளர்களுக்குப் பழகிப்போன ஒன்றாகிவிட்டது. ஆனால், உண்மையிலேயே இந்த வெள்ளப் பெருக்குக்குக் காரணம் இயற்கையா?

மழையளவில் மாற்றமா?

அண்மைக் காலமாக வெள்ளப் பெருக்கு ஏற்படும்போதெல்லாம், காலநிலை மாற்றத்தினால் (Climate Change) மழையின் இயல்பு மாறிவிட்டது என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது. 1980களிலும், 1990களிலும் பெற்றதைவிட குறுகிய காலத்தில் மிகஅதிக மழை பொழிவது உண்மைதான் என்றாலும், தமிழ்நாட்டின் மொத்த வடகிழக்குப் பருவமழைப் பொழிவின் அளவில் மிகப்பெரிய மாற்றம் இல்லை.

1970களில் 462 மி.மீ. ஆக இருந்த சராசரி மழையளவு, 2000-01க்குப் பிறகு 470 மி.மீ. ஆக உள்ளது. பிரச்சினை மழையளவில் இல்லை, பொழியும் மழைநீரைச் சேமித்து வைத்துப் பயன்படுத்தும் உள்கட்டமைப்பு வசதிகளை நாம் சீரழித்திருப்பதில்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், அணைகளைக் காட்டிலும் பரவலாக அமைந்திருக்கும் மரபார்ந்த சிறிய நீர்நிலைகளான ஏரிகளும் குளங்களுமே நீர்வளப் பாதுகாப்புக்கும் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கும் முதுகெலும்பாக விளங்கிவந்துள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 41,127 குளங்களும் ஏரிகளும் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்தச் சேமிப்புத் திறன் (347 டிஎம்சி); மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளின் மொத்தக் கொள்ளளவை (243 டிஎம்சி) காட்டிலும் இது மிக அதிகம்.

வரலாற்றுரீதியாக, இந்தக் குளங்களும் ஏரிகளும் சங்கிலித் தொடர் அமைப்பில் (Cascade System) பிணைக்கப்பட்டிருந்தன. ஒரு ஏரி நிறைந்தால், அதன் உபரிநீர் அடுத்த ஏரிக்குச் செல்லும்படி மதகுகளும், கால்வாய்களும் கட்டுமானப் பொறியியல் (Civil Engineering) இல்லாத காலங்களிலேயே துல்லியமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

இத்தகைய இயற்கை உள்கட்டமைப்பு வசதிதான் பல நூற்றாண்டுகளாகப் பெருமழை வெள்ளத்தைத் தாங்கிப்பிடித்து, நீர்நிலைகளை நிரப்பி, வெள்ளச் சேதங்களிலிருந்து நகரங்கள், கிராமங்கள், பயிர்களைக் காப்பாற்றிவந்தது.

Loading content, please wait...

X