சிறப்புக் கட்டுரைகள்
வரலாறு என்னும் அறிவுத் துறை | காலத்தின் தூரிகை 6
கடந்த காலத்தை எளிய, அழகிய கதைகளாக மாற்றி அளிப்பதே ஒரு வரலாற்றாளரின் பணி என்னும் பெரும்பாலானோரின் நம்பிக்கையை உடைத்தெறிந்து, ஓர் அறிவியல் ஆய்வாளராக வரலாற்றாளரை உயர்த்தியவர்களுள் முதன்மையானவர் லியோபால்ட் ஃபான் ராங்க (Leopold von Ranke).
ஜெர்மானியரான ராங்க இறையியலும் செவ்வியல் இலக்கியமும் பயின்ற பின், பண்டைய வரலாற்றால் ஈர்க்கப்பட்டார். அதிகாரம் படைத்த ஒரு சிலர் எடுக்கும் முடிவுகள் எவ்வாறு மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்பதை நேரடியாக உணர்ந்தபோது அவரது ஆர்வம் அரசியல் வரலாற்றின்மீது படர்ந்தது. இறுதிவரை நீடித்த அந்த ஆர்வம் வரலாற்றுத் துறையைப் பெருமளவு மாற்றியமைத்தது.
