ஈழக் கவிதையின் நவீன முகம் | அஞ்சலி: கவிஞர் சேரன்

ஈழக் கவிதையின் நவீன முகம் | அஞ்சலி: கவிஞர் சேரன்
Updated on: 
1 min read

கவிஞர் சேரன், காலமாகி​விட்​டார். கனடாவின் வின்​சர் பல்​கலைக்​கழகத்​தின் சமூக​வியல் பேராசி​ரியராகப் பணி​யாற்​றிய​வர். பாரதிக்​குப் பிறகான கவிதைக் கிளை​யாகத் துளிர்த்த மஹாக​வி​யின் (உருத்​திரமூர்த்தி) மகன். மஹாகவிக்​குப் பிறகு ஈழத்​தில் உரு​வான இளம்​படைக் கவிஞர்​களின் மூன்றாம் தலைமுறை எனச் சேரனை வரிசைப்​படுத்​தலாம். சண்​முகம் சிவலிங்​கம், எம்.ஏ.நுஃமான், மு.பொன்​னம்​பலம், சு.வில்வ ரத்​தினம் போன்ற உரத்​தக் கவிஞர்​களைப் போல் சேரனும் ஈழ நெருக்​கடிப் பின்​னணி​யி​லிருந்து அதே முடுக்​கத்​துடன் புறப்​பட்​ட​வர்​தான். ஆனால் அதை மொழியளவில் நவீனப்​படுத்​தி​ய​வர்.

1972இல் எழுதத் தொடங்​கிய சேரன், 1978இல்​தான் தன் கவிதையைத் தீவிரப்​படுத்​தினார். அவரது கவிதைகள் தொகுக்​கப்​பட்டு 1983இல் ‘வயல்’ காலாண்​டிதழில் வெளிவந்​தன. இந்த 1978-1983 கால​கட்​டத்​தில்​தான் இலங்​கை​யில் இனப் பிரச்​சினை வன்​முறை​யாக மாறியது. இனக் கல​வரம் 1981இல் நடந்​தது; யாழ் நூல​கம் எரிக்​கப்​பட்​டது. அவரது முதல் கவிதைத் தொகுப்​பின் தலைப்பு ‘இரண்​டாவது சூரிய உதயம்’. இது யாழ்ப்​பாண நூலக எரிப்​புச் சம்​பவத்தை அடிப்​படை​யாகக் கொண்​டது.

1981க்​குப் பிறகும் வன்​முறைகள் தொடர்ந்​தன. சேரன் கவிதைகளும் இந்​தப் பின்​னணி​யில் மூர்க்​கம் கொண்​டன.

தமிழ்ச் செவ்​வியல் இலக்​கியங்​களுக்கு உரிய ஓசை நயம் சேரன் கவிதைகளுக்கு உண்டு. இது ஈழக் கவிதைகளின் விசேஷமான அம்​சம். நாட்​டார் பாடல்​களின் சில அம்​சங்​களை​யும் சேரன் கவிதைகள் கைக்​கொண்​டுள்​ளன. தமிழக நவீனக் கவிதை சூடிக்​கொண்ட மர்​மம்​தான் சேரனை ஈழக் கவிஞர்களி​லிருந்து வேறு​படுத்​து​வது.

Loading content, please wait...

X