

கரிசல் பிரதேசத்து மக்கள், சமூக நெருக்கடிகளில் வாழ்ந்ததை தனது கதைகளில் ஆழமாகப் பேசியவர் பா.செயப்பிரகாசம். இரு அம்சங்களை அவர் தீவிரமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒன்று வறுமை. மற்றொன்று நிலவுடைமைச் சமூகத்தின் ஆதிக்கம்.
பா.செயப்பிரகாசத்தின் புகழ்பெற்ற கதைகளில் ஒன்று ‘தாலியில் பூச்சூடியவர்கள்’. உயர்சாதி ஆதிக்கமுள்ள கிராமத்துக்கு தைலி என்ற பெண் வாக்கப்பட்டு வருகிறாள். அவளது வடிவழகு பலரை கிறங்கடிக்கிறது. பெண்கள் தீச்சட்டி ஏந்தாத ஊரில் தைலி தீச்சட்டி ஏந்தி வருவதை ஊரே வேடிக்கை பார்க்கிறது. அடுத்தடுத்து தைலிக்கு நேரும் அனுபவங்கள்தான் கதை.