உயி​ரில் நிறைந்த ஆன்மா | கதை அறியும் கலை

உயி​ரில் நிறைந்த ஆன்மா | கதை அறியும் கலை
Updated on
2 min read

கரிசல் காட்டு எழுத்​தின் முன்​னத்தி ஏராகத் திகழ்​பவர் கி.​ராஜ​நா​ராயணன். விவ​சா​யிக்கு மழை​யும் நில​மும் நேரடி​யாகத் தெரி​யும் ரத்​த​பந்த உறவு​கள். இந்த உறவின் மகத்​து​வத்​தைக் கொண்டு வருபவனின் கதை​தான் கி.​ரா.​வின் ‘நிலைநிறுத்தல்.’

அந்​தக் கரிசல் கிராமத்​துக்​குப் பஞ்​சம் பிழைக்க வரு​கிறது சாமி கொண்​டாடி குடும்​பம். அந்​தக் குடும்​பத்​தில் பதி​னாலு வயசு மாசாணத்தை பண்ணை முதலாளி பார்க்​கிறார். வீட்​டுக்கு அழைத்து வரு​கிறார். அவன் உண்​ணும் முறையைப் பார்த்து விவ​சா​யத்​துக்​குச் சரி​யான ஆள் என்று பெரு​மிதம் கொள்​கிறார். வேலை செய்​கிறான்; அடி​வாங்​கு​கிறான்; அரவணைக்​கப்​பட​வும் செய்​கிறான்; அப்​படியே வளர்​கிறான்; திரு​மணம் செய்து கொள்​கிறான். மழை​யில்​லாமல் தாண்​ட​வ​மாடும் வறட்​சி​யைப் பற்றி ஊரே பேசுகிறது. நேரே பார்​வதி அம்​மன் கோயில்​முன் விழுந்து வணங்​கு​கிறான். என்ன நடக்​கிறது என்​பது கதை​யின் முடிவு.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in