உயிர்பெற்று விரியும் மாயஉலகம் | கதை அறியும் கலை

உயிர்பெற்று விரியும் மாயஉலகம் | கதை அறியும் கலை
Updated on
2 min read

மாயத் தன்​மையை யதார்த்த உலகத்​தில் நிறுத்தி அர்த்​தப்​பூர்​வ​மாக​வும் விமர்​சனப்​பூர்​வ​மாக​வும் விரித்​துக் காட்​டிய மகத்​தான கதைக்​கலைஞன் புது​மைப்​பித்​தன். மூவா​யிரம் ஆண்​டு​களுக்கு முன் ஆழிப்​பேரலை​யால் தென்​மதுரை​யும் அடுத்து கபாடபுர​மும் அழிந்​து​போனது என்ற தொன்​மக்​கதை தமிழ்ப் பண்​பாட்​்டுக்கே மூல​வித்​தாக நம்​பப்​பட்டு வரு​கிறது. இதைப் பற்றி பேசும் கதை புதுமைப்பித்தனின் ‘கபாடபுரம்’.

சித்​தர்​களின் அபார​மான மாயசக்​தி​யின் மூலம் நிஜ உலகின் பெருங்​கூட்​டிலிருந்து பிரிந்து ஆழ்​கடல் உலகிற்​குள் புகுந்து அழிந்​து​போன தமிழரின் தொல்​பழங்​காலத்து கபாடபுரத்​தைக் காண்​பது​தான் கதை. எப்​போதும்​போல் தரிசிக்க வரு​கிறான் பக்​தன் ஒரு​வன். அவன் கோயிலுக்​குள் இருப்​பதை அறி​யாமல் அர்ச்​சகன் கதவைச் சாத்​தி​விட்​டுச் சென்​று​விடு​கிறான். உள்ளேயே மாட்​டி​கொண்டு இரவு தங்​கு​கிறான். அவன் குமரிக்​கோட்​டுடன் பூர்​வபந்​தம் கொண்​ட​வன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in