பொருந்தி மிளிரும் குறியீடு | கதை அறியும் கலை

பொருந்தி மிளிரும் குறியீடு | கதை அறியும் கலை

Published on

விமர்​சரும் கவிஞரு​மான பிரமிள் இந்​தி​யா​வில் வாழ்ந்து மறைந்​தா​லும் அவர் பிறந்து வளர்ந்​தது எல்​லாம் இலங்​கை​தான். இலங்​கைப் பின்​னணி​யில், அவர் எழு​திய ‘லங்​காபுரி ராஜா’ ஒரு சாதனைக் கதை ஆகும். இக்​கதை இலங்​கை​யின் எண்​பதுகள் கால​கட்ட தமிழர்​கள் நிலை​யைப் பேசுகிறது.

கோபால​கிருஷ்ணன், சிங்​களவர்​கள் அதி​கம் வாழும் லங்​காபுரி மலைக்​கி​ராமத்​துக்கு நில அளவைப் பணி​யின் பொருட்டு மாற்​றலாகி வரு​கிறான். காட்​டின் ராஜா​வான பிர​மாண்​ட​மான யானை இப்​பக்​கம் எப்​போ​தாவது வரு​கிறது. தூரத்​திலிருந்தே அந்த அபூர்​வக் காட்​சி​யைக் காணும் மக்​கள் வாழ்த்தி மகிழ்​கின்​றனர். தங்​கள் காட்​டின் பாது​காவலன் என்​றும் நம்​பு​கின்​றனர்.

காட்டை அழித்து கரும்பு பயி​ரிடு​வதற்​காக அரசு நிர்​வாகம், ஆட்​களை ஏவு​கிறது. மக்​களின் எதிர்ப்பை மீறி யானை​களை அப்​புறப்​படுத்​தும் திட்​டம் அமலாகிறது. மரங்​களை வெட்டி கூண்​டு​களை அமைக்​கின்​றனர். அதில் மாட்​டிக் கொண்ட யானை​கள் பிளிறுகின்​றன. கூண்​டு​களை ராஜா யானை தகர்த்து விடுவிக்​கிறது. அதி​காரி நெற்​றி​யில் சுடு​கிறான். சுட்ட பின்​பும் மிச்​சமீதி கூண்​டு​களை ஆவேசத்​துடன் உடைத்து வெளி​யேற்​றி​விட்டு மரணமடைகிறது. இது கதை.

தங்​களின் காட்​டை​யும் வாழ்​வை​யும் காப்​பாற்​றுகிற அரசன் காடேறி வந்து நிற்​கும்​போது ‘தொடு​வானில் உதித்​தெழுந்து அசை​யாமல் நிற்​கிற பர்​வதம்​போல’ அவர்​களுக்கு யானை தோன்​றுகிறது. யாராளும் தூக்க முடி​யாத தந்​தம் காட்​டின் வாளாக நீண்​டிருப்​ப​தாகக் காண்​கின்​றனர். இந்த யானை வந்து மறைவது​போல கோபாலின் மகன் அபி சிறு​வய​தில் காட்​டுக்​குள் மறைந்​து​விடு​கிறான்.

சிங்கள தாத்தா தேடி அபியை அழைத்து வரு​கிறார். வளர​வளர காட்​டுக்​குள் அடிக்​கடி சென்று மறைந்​து​விடு​கிறான். பள்​ளிப்​படிப்பு முடிந்​த​பின் அதன்​பின், முழு​தாகவே மறைந்து விடு​கிறான். நாட்​டில் சிங்​களவரின் வெறி​யாட்​டம் நிகழ்​வதும் கதைக்​குள் வரு​கிறது. அபியைத் தேடிவந்த போலிஸ் இன்​ஸ்​பெக்​டர் அவன் தலை​யணை அடியி​லிருந்து அமில்​கார் கப்​ரால், பனான், மண்​டேலா நூல்​களைக் கைப்​பற்​றுகின்​றனர்.

<div class="paragraphs"><p>​பிரமிள்</p></div>

​பிரமிள்

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in