கலையாகும் கருத்துருவகத் தொன்மம் | கதை அறியும் கலை

கலையாகும் கருத்துருவகத் தொன்மம் | கதை அறியும் கலை
Updated on
2 min read

உமா வரத​ராஜன் ஈழத்​தின் முக்​கிய​மான படைப்​பாளி. அவர் எழு​திய மிகச் சிறப்​பான கதைகளுள் ஒன்று ‘அரசனின் வரு​கை’. கருத்​துரு​வகப் (Allegory) பாணி​யில் அமைந்த இக்​கதை, போரில் இடிக்​கப்​பட்ட கோயிலைத் திரும்​பக் கட்​டித் தரு​வ​தாக வாக்​குறுதி அளிக்க வரவிருக்​கும் அரசனைப் பற்​றியது. அதற்​கான ஏற்​பாடு​கள் ஒரு​புறம் நடக்க, போரி​னால் நேர்ந்த மானுடச் சிதைவு​களை​யும் பேரழி​வு​களை​யும் ‘ஊமையன்’ என்ற கதா​பாத்​திரத்​தின் விவரணை வழியே கதை முன்​னிறுத்​துகிறது.

ஈழம் என்ற நிலப்​பரப்​பைக் கதை நேரடி​யாகச் சுட்​ட​வில்லை என்​றாலும், அறு​ப​தாண்டு கால​மாகத் தமிழ் இனம் எவ்​விதமெல்​லாம் சிதைவுக்கு உள்​ளானது என்​பதை உய்த்​துணரும் வகை​யில் உரு​வகங்​களால் விவரிக்​கப்​பட்​டிருக்​கிறது. கருத்​துரு​வகங்​களைச் சுமந்து நிற்​கும் ஒவ்​வொரு வாக்​கிய​மும், வரி​களுக்கு அப்​பால் வேறொரு ஆழமான அர்த்​தத்தை வெளிப்​படுத்​துகிறது. ஈழத் தமிழ் மக்​கள் எதிர்​கொண்ட ஒரு நூற்​றாண்டு கால கொடூரங்​களை​யும், அழித்​தொழிப்​பு​களை​யும் இது மிக அழுத்​த​மாகப் பேசுகிறது. ஓர் இனத்​தின் இன்​றைய கொடூரங்​கள் தொன்​ம காலத்துப் பின்​னணி​யில் வைத்​துச் சொல்​லப்​பட்​டுள்ளன.

அரசன் வரவிருப்பது தெரிவிக்​கப்​படு​கிறது. பேசும் ஆற்றலையே இழந்​து​போன ஊமையனின் உள்​ளத்​தில் பழைய நினை​வு​கள் கொந்​தளித்து எழுகின்​றன. ‘அப்​போதைய பிணங்​களின் எரிந்த வாடை இன்​ன​மும் அகலாமல் நகரத்​தின் வானத்​தில் தேங்​கிப் போய் நின்​றது. சிங்​களப் படைகள் நகரில் நுழைந்து செய்த அட்​டூழி​யங்​கள், கரும்​புத் தோட்​டத்​தில் புகுந்த யானை​கள் துவம்​சம் செய்​தது​போல் ஆயின. சவரக் கத்தி வைத்​திருந்​ததற்​காக ஊமையனைப் பாதணி​கள் இல்​லாமல் கொதி​மணலின் நடு​வில் முழங்​காலிட வைத்​தனர். சூரிய நமஸ்​காரம் செய்​யும்​படிச் செய்​து, வாயில் கல்​லைத் திணித்து வயிற்​றில் குத்​திய குத்​தில் ‘அம்​மா’ என்ற வார்த்​தைகூட கல்​லைத் தாண்டி வரவில்​லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in