இல்லாது போகும் கோலங்கள் | கதை அறியும் கலை

இல்லாது போகும் கோலங்கள் | கதை அறியும் கலை
Updated on
3 min read

'எழுத்து' இதழில் இணைந்து செயல்பட்டவர் கி.ஆ.சச்சிதானந்தம். அவர் எழுதிய முக்கியமான கதைகளுள் ஒன்று 'மேதில்டா.' இது ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தை மையமிட்டு எழுதப் பட்ட கதை. மார்க் கரெட் என்ற பெண் ணுக்கு இரண்டு கணவர்கள். முதல் கணவனுக் குப் பிறந்தவன் பீட்டர். இரண்டாம் கணவன் வெள்ளைக்காரனுக்குப் பிறந்தவள் மேதில்டா. பீட்டர் கருப்புநிறம் கொண்டவன். மேதில்டா வெள்ளை நிறம் கொண்டவள். இவர்களின் வாழ்க்கை, பேச்சு எல்லாம் ஆங்கிலேய முறையில் இருக்கிறது.

பீட்டர் பட்டம் விடு வதில் கெட்டிக்காரன். அவனுக்கு நண்ப னாகிறான் கதைசொல்லி. இந்தக் குடும்பத் தில் என்னென்ன நிகழ்கிறது, எப்படியெல்லாம் சிதைந்து போனார்கள் என்பதைக் கதை சொல் லியின் கண்ணோட்டத்தில் சொல்லப்படுவது தான் கதை. சென்னை, லாயிட்ஸ் ரோட்டை ஒட்டிய காலி மைதானத்தில்தான் பட்டம்விடும் விளையாட்டு நடைபெறும். மற்றவர்கள் பட்டங் களை விலைக்கு வாங்கி வந்து போட்டியில் பங்கேற்பார்கள். பீட் டர் அவனே பட்டங்களை வடி வாகச் செய்துகொண்டு வருபவன்.

ஆயிரம் விளக்கு தாமோதரன்', 'மீர் சாகிப்பேட்டை அமீர்காள்' போன்ற புகழ்பெற்ற கில்லாடிகளையே பட் டம் விட்டு வெல்லும் திறமை படைத் தவன். பட்டங்களை உருவாக்கும் கைத்திறமை, மாஞ்சா நூல் உரு வாக்கும் முறைமை, போட்டியில் இவனது பட்டத்தை வீழ்த்த எதிராளிகள் மோதினாலும் அவனது வளைந்த வலது கை அமைப்பி னால் வெல்வதாக நம்பும் நம்பிக்கை என எல்லாவற்றையும் உடனிருந்து கவனிக் கிறான் கதைசொல்லி. வென்ற பட்டங்களைக் கீழிறக்கி தனக்கு உதவிய சிறுவர்களுக்குப் பரிசாகத் தந்துவிடும் குணம் படைத்தவன். ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளைச் சொல்பவன். வார்த்தையின் பொருள் அறியாமல் கதை சொல்லி அதைச் சொல்லி அடியும் வாங்குகிறான்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in