உக்கிரம்கொள்ளும் யதார்த்தம் | கதை அறியும் கலை

உக்கிரம்கொள்ளும் யதார்த்தம் | கதை அறியும் கலை
Updated on
3 min read

வண்​ணநில​வன், கந்​தர்​வன் போன்ற படைப்​பாளி​கள் நுட்​ப​மான முறை​யில் யதார்த்த உலகினைக் கதைகளில் விவரித்த போக்​குக்கு மாறாக, உக்​கிர​மான யதார்த்​தத்தை தமிழில் முதன்​முதலில் பதிவு செய்​தவர் திலீப்குமார். மிகை​யுணர்ச்​சிகளை​யும் போலி மதிப்​பீடு​களை​யும் முற்​றாகத் துறந்த அப்​பட்​ட​மான சித்​திரங்​களால் உரு​வான நிதர்​சனமே அவரது படைப்​புல​கம். அந்த வகை​யில், திலீப்​கு​மாரின் மிக முக்​கிய​மான சிறுகதைகளுள் ஒன்று ‘மூங்​கில் குருத்​து’.

கதை​யின் நாயகன் கிருஷ்ணாஜி​ராவ், தையல் கடை​யில் பத்து பேரோடு வேலை செய்​கிறவன். மூல வியாதி முற்றி அப்பா சீரழிந்து இறந்​ததைப் பார்த்​தவன். இவனது முதலாளி பத்​ம​நாத்​ராவ், சுபீட்​சத்​திலிருந்து தரித்​திரத்துக்​குச் சரிந்​தவர். மல்​யுத்த வீரன் கிங்​காங்​குக்கு சூட், பெருந்​தலை​வர் காம​ராஜருக்​குக் கதர்ச் சட்டை தைத்​துக் கொடுத்த புகழுக்​குரிய​வர். குதிரைப் பந்​த​யம், ஆங்​கிலோ-இந்​தி​யப் பெண்​களு​ட​னான தொடர்​பு, சினிமா தொழில் எனப் பணத்தை இழந்​தவர். அவருக்கு நான்கு குழந்​தைகள்.

புதுப் படங்​கள் திரை​யிட்​டால் நண்​பர்​களோடு படத்துக்​குப் போவார்; சிகரெட் பிடிப்​பார்; வேலை செய்​பவர்​களைக் கண்​டபடி ஏசு​வார். அவரது பெரிய மகள் பக்​கத்து வீட்​டில் வார இதழ் வாங்கி வரு​வதைப் பார்த்​தால் அடிஅடி​யென்று அடிப்​பார்; நண்​பர்​களோடு குடித்து மகிழ்​வார். இவன் கடை​யின் கணக்கு வழக்கு பார்ப்​ப​தோடு, அவரது குழந்​தைகளுக்​கும் பாடம் சொல்​லிக்கொடுப்​பான். அவர் மராத்​தி, இவன் குஜ​ராத்​தி.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in