நெருக்கடியில் மாறும் மனம் | கதை அறியும் கலை

நெருக்கடியில் மாறும் மனம் | கதை அறியும் கலை
Updated on
2 min read

‘கசடப​தற’ இலக்​கிய இதழை நடத்​திய நா.கிருஷ்ண​மூர்த்​தி, குறைந்த எண்​ணிக்​கை​யிலேயே கதைகள் எழு​தி​யிருந்​தா​லும், தமிழ் இலக்​கி​யத்​துக்கு மிகச் சிறந்த படைப்​பு​களைத் தந்​தவர். மனித மனங்​களில் வரையறுக்க முடி​யாத புதி​ராகப் பதுங்​கி​யிருக்​கும் இயல்​பு​களை இவரது கதைகள் வெளிச்​சமிட்​டுக் காட்​டு​கின்​றன.

காவிரி​யில் புது​வெள்​ளம் பெரு​கியோடும் வேளை​யில், ஆற்​றங்​கரை​யில் நிற்​கும் அண்​ணா​மலைக்​குச் சிறு​வயது முதல் தான் ஆற்​றில் தத்​தளித்​தவர்​களைக் காப்​பாற்​றிய நினை​வு​கள் மேலெழுகின்​றன.

24 வயதில் கோபாலய்​யரின் மரு​மகள் தண்​ணீரில் இழுத்​துச் செல்​லப்​பட்​ட​போது அவள் கூந்​தலைப் பிடித்து இழுத்​துக் காப்​பாற்​றியது, ஆறு​முகப் படையாச்​சி​யின் தாயாரைச் சுழலிலிருந்து மீட்​டது, செட்​டி​யார் வீட்​டில் திருடி​விட்டு ஆற்​றைக் கடக்க முயன்ற திருடர்​களைச் சுழலிலேயே மடக்​கிப் பிடித்து இழுத்து வந்​தது என அவனது நீச்​சல் சாகசம் மாய​வரம் வரை புகழ்​பெற்​றிருந்​தது.

அப்​போது, அக்​கரை​யிலுள்ள பாப்​பாஞ்​சாவடிக்​குச் செல்ல வேண்​டும் என்ற நோக்​கத்​தோடு சிதம்​பரம் என்​னும் ஏழை இக்​கரை வழி​யாக வரு​கிறான். முலாம் பூசும் தொழிலா​ளி​யான அவனுக்கு நீச்​சல் தெரி​யாது; நான்கு குழந்​தைகளும் உண்​டு; மனை​வி​யும் இறந்​து​விட்​டாள்.

தோணிக்​காரன் கூடு​தல் கட்​ட​ணம் கேட்​ப​தால் யோசிக்​கும் சிதம்​பரத்​திடம், இரண்டு ரூபாய் மிச்​ச​மாகுமென்​றும் தானாகவே அக்​கரைக்கு அழைத்​துச் செல்​வ​தாக​வும் அண்​ணா​மலை கூறுகிறான். தன் பழம்​பெரும் வீரதீரங்​களை அவன் விவரிக்க, அதை நம்பி சிதம்​பர​மும் அவனோடு ஆற்​றில் இறங்கி கையைக் கெட்​டி​யாகப் பிடித்​துக் கொள்​கிறான். இவர்​கள் இரு​வருக்​கும் இடையே நிகழும் ஆபத்​தான போக்கை மைய​மாகக் கொண்​டது​தான் ‘மனிதர்கள்’ சிறுகதை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in