உலர்ந்த கண்ணீர் தடம் | கதை அறியும் கலை

உலர்ந்த கண்ணீர் தடம் | கதை அறியும் கலை
Updated on
2 min read

முரண்​பாடு​களின் ஊடே நகரும் குடும்ப உறவு​களின் சிக்​கல்​களை நுட்​ப​மாக எழுதுபவர் எம்.கோபால​கிருஷ்ணன். அதில் பெண்​களின் உலர்ந்த கண்​ணீர்​தடத்​தைக் கண்டு சொல்​லும் பரிவை இயல்​பாகப் பெற்​றவர். அவர் எழு​திய கதை ‘சூடக் கொடுத்தவள்.’

கோவை – மயி​லாடு​துறை சதாப்தி விரைவு வண்​டி​யில் கோயில் காரிய​மாக அடிக்​கடி பயணம் செய்​பவள் அந்​தப் பெண். 38 வயதான அவள், பயணத்​திலேயே அம்​மனுக்கு மாலை தொடுப்​பாள். நண்​பர்​கள் பட்டு சாத்​தத் தந்​தால் ஒப்​படைப்​பாள்; பிர​சாதம் தரு​வாள். சமையல்​கார​ரான அவளது கணவர் வடநாட்டு திவ்​யதேசங்​களுக்​குச் செல்​பவர். அவரது தொடர்​பு​கள் வழியே வேண்​டு​தலை நிறைவேற்​றும் அவளது வாழ்​விலும் தீராத முரண் ஒன்று உறுத்​துகிறது. அதைத் தொட்​டுத் திறப்​பதே இக்​கதை.

குளிரூட்​டப்​பட்ட பெட்​டி​யில் தம்​ப​தி​யர் ஏறுகின்​றனர். எதிரில் அமர்ந்து அவள் பூக்​களை மாலை​யாக்​கு​கிறாள். பிச்​சி, சம்​பங்​கி, ரோஜா மணம் வீசுகிறது; எவர்​சில்​வர் பாத்​திரத்​தில் முல்லை நிரம்​பி​யுள்​ளது. அறி​முகத்​திற்​குப் பின் தம்​ப​தி​யர் கும்​பகோணம் செல்​வ​தாக​வும், இவள் மாய​வரம், திருக்​கடையூர் கோயில்​களுக்கு தோள்​மாலை கொண்டு செல்​வ​தாக​வும் கூறுகிறாள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in