ஒற்றைக் குரலில் சுழலும் ‘அணி' | கதை அறியும் கலை

ஒற்றைக் குரலில் சுழலும் ‘அணி' | கதை அறியும் கலை
Updated on
1 min read

இலங்​கை​யின் முதன்மை எழுத்​தாளர்​களில் ஒரு​வ​ரான எஸ். பொன்​னுத்​துரை​யின் (எஸ்​.பொ.) தனித்​து​வ​மிக்க சிறுகதை ‘அணி’. சலூன் கடைக்கு வந்த புதிய வாடிக்​கை​யாளரிடம் நாவிதர் உரை​யாடு​வ​தாகக் கதை நகர்​கிறது. வாடிக்​கை​யாளரின் மெல்​லிய ஆமோ​திப்​பு​கள், குறுகிய பதில்​கள் மற்​றும் மறுப்​பு​களை நாவிதரின் ஒற்​றைக் குரல் வழியே ஆசிரியர் நேர்த்​தி​யாக விவரிக்​கிறார். முடி​வெட்​டும்​போது தலையை அசைக்காமல் மட்​டுமே பேச முடி​யும் என்​ப​தால், இந்த ‘ஒற்​றைக் குரல் உத்​தி’ கதைச்​சூழலுக்கு மிக இயல்​பாகப் பொருந்​துகிறது.

“வேலை மாற்​றலாகி வரவில்​லை​யா?”, “மட்​டக்​களப்​பிலிருந்து நல்​லூர் கந்​தசு​வாமி கோயிலைப் பார்க்க வந்​திருக்​கிறீர்​களா?”, “லியூ–​சாவூ–ஸி என்றா சொன்​னீர்​கள்​?”, “அங்கு அவ்​வள​வாகச் சாதி பார்ப்​ப​தில்லை என்​கிறீர்​களா?” என உரை​யாடல் வழியே வாடிக்​கை​யாளரின் குரலை​யும் கதைசொல்​லியே வெளிப்​படுத்​து​வது சிறப்​பு.

அண்​ணன் - தம்பி இணைந்து நடத்​தும் சலூன் அது. அண்​ணன் மகன் விக்​டர் படிக்க ஆசைப்​படு​கிறான். ஆனால், பள்​ளி​யில் எதிர்​கொண்ட சாதிய ஏளனங்​களால் ஏழாம் வகுப்​போடு அவனது கல்வி முடங்​கு​கிறது; வேறு வழி​யின்றி நாவிதர் தொழிலுக்கே வரு​கிறான். சலூனில் எப்​போதும் ஒலிக்​கும் அரசி​யல் விவாதங்​கள் விக்​டரை ஓர் அரசி​யல் செயல்​பாட்​டாள​னாக மாற்​றுகின்​றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in