சொல்லியதும் சொல்லாததும் | கதை அறியும் கலை

சொல்லியதும் சொல்லாததும் | கதை அறியும் கலை
Updated on
2 min read

மனித வாழ்​வியலை இயற்​கை​யின் பேருண்​மை​களோடு பிணைத்து ஆழமான தரிசனங்​களை ந.பிச்​சமூர்த்​தி​யின் எழுத்​துல​கம் உரு​வாக்​கு​வது. நடுத்தர வயதைக் கடந்த ஒரு சாமானிய அரசு ஊழியரின் அன்​றாடப் பாடு​களை​யும், அவனது அகத் தத்​தளிப்​பு​களை​யும் அதன் அடி​யாழத்து அடர்த்​தி​யோடு பேசுகிறது பிச்​சமூர்த்​தி​யின் ‘ஒரு​நாள்’ சிறுகதை.

காலை​யில் அலு​வல​கத்​துக்​குக் கிளம்​புவது, வழி​யில் எதிர்​கொள்​ளும் மனிதர்​களின் சிடுசிடுப்​பு​கள், இயந்​திரத்​தன​மான பணிச்​சூழல், மாலை ஐந்து மணிக்​குக் குளக்​கரை வழியே வீடு திரும்​புவது என ஒரு சாமானியனின் தினசரி நகர்வே இக்​கதை​யின் அச்​சு. மூன்று பிள்​ளை​களின் தந்​தை​யான அவன், குடும்​பம், கடன், பயணம், அலு​வல​கம் எனப் பல முனை​களி​லும் பதிலளிக்க வேண்​டிய நிர்​பந்​தத்​தில் இருக்​கிறான். வயிற்​றுப்​பசி எனும் முளைக்​குச்​சி​யில் கட்​டப்​பட்​டு, காலச்​சக்​கரத்​தில் ஓயாமல்சுழலும் ஒரு மாதச்​சம்​பளக்​காரனின் வாழ்வை இக்​கதை மிக நேர்த்​தி​யாகப் படம்​பிடிக்​கிறது.

மளி​கைக் கடைக்​கடன் ரூ.150 ஆக உயர்ந்​து​விட்​ட​தால், கடைவீதி வழியே செல்​லவே மகன் அஞ்​சுகிறான் என மனைவி சாடு​கிறாள். “இப்​போது கையில் காசில்​லை, தேதி 13 ஆகி​விட்​டது தெரி​யா​தா?” என்று சலித்​துக் கொள்​ளும் அவனுக்​குள், ‘தம்​ளரில் இருக்​கும் தண்​ணீர் பார்ப்​ப​தற்​குத்​தான் அமை​தி; பூதக்​கண்​ணாடி வழியே பார்த்​தால் அது சமுத்​திரத்​தின் பேரலைகளைப் போலப் பொங்​கித் தத்​தளித்​துக் கொண்​டிருக்​கும்’ என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. வெளியே கவலை​யற்​றவன் போல் தோன்​றும் சாமானியனின் அகத்​துக்​குள் நிகழும் இத்​தகைய உணர்​வுப் பேரலைகளைப் பிச்​சமூர்த்திதன் மொழி ஆளு​மை​யால் அசாத்​தி​ய​மாகச் சாத்​தி​யப்​படுத்​தி​யுள்​ளார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in