மகத்துவங்களின் மீது படியும் வெளிச்சம் | கதை அறியும் கலை

மகத்துவங்களின் மீது படியும் வெளிச்சம் | கதை அறியும் கலை
Updated on
2 min read

பாவண்​ணனின் கதைகள் மனித உறவு​களின் சிக்​கல்​களை​யும், அவற்​றுள் பொதிந்​துள்ள உன்​னதங்​களை​யும் பூரண ஒளி​யுடன் வெளிப்​படுத்​துகின்​றன. மானுடத்​தின் மீதான தீராத நம்​பிக்​கை​யைத் தன்​னுள் தாங்கி நிற்​கும் அத்​தகைய படைப்​பு​களில் ஒன்​று​தான் ‘காணிக்​கை’.

கண்ணுக்குத் தெரியாத குயில்: கணேசனின் தாய்க்கு ஐயனார் மீது அசைக்க முடி​யாத பக்​தி. அவளுக்கு அறுவை சிகிச்சை நேரிடும்​போது, அது​வரை இறைநம்​பிக்​கையற்ற கணேசன், அம்மா நலம்​பெற ஒரு கணம் ஐயனாரிடம் வேண்​டு​கிறான். ஆனால் தாய் இறந்​து​விட, வேண்​டு​தல் பலிக்​க​வில்லை என்ற மனக்​குறை அவனுக்​குள் தங்​கு​கிறது. ஆயினும், நேர்த்​திக்​கடனைச் செலுத்த வேண்​டும் என்ற மனைவி சார​தா​வின் பிடி​வாதத்​திற்​காக, வாடகை காரில் குலதெய்​வம் கோயிலுக்​குச் செல்​கிறார்​கள்.

அடர்ந்த காட்டு வழி​யில் பம்​பை​யின் பேரொலி அதிர அதிர, கணேசனுக்​குள் தாயின் நினை​வு​கள் அலைமோதுகின்​றன. உடைந்த கொல்​லைப் படலை மூங்​கிலால் சரிசெய்​யும் உழைப்​பு, துணி​களின் சுருக்​கங்​களை நீவும் நேர்த்​தி, பிள்​ளை​களுக்​குக் காய்ச்​சல் வந்​தால் ஐயனாரிடம் காணிக்கை வைக்க ஓடும் பாசம், தெருக் குழந்​தைகளைக் கொஞ்​சும் அன்பு எனத் தாயின் பிம்​பங்​கள் அவன் நெஞ்​சில் நிழலாடு​கின்​றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in