ஆழங்களுக்குள் செல்லும் முடிவு | கதை அறியும் கலை

ஆழங்களுக்குள் செல்லும் முடிவு | கதை அறியும் கலை
Updated on
2 min read

பின்​நவீனத்​து​வத்​தின் வருகை தமிழ்ச் சிறுகதை வெளியைப் பன்​முகத்​தன்​மை​யுடன் திறந்​து​விட்​டது. 1980களுக்​குப் பின், வரலாற்​றை​யும் புனை​வை​யும் பரஸ்​பரம் பிணைத்து வித​வித​மான கதைகள் எழுதப்​பட்​டன. இவ்​வகை​யில் ஜெயமோகன், மறைந்​து​போன கடந்​த​காலத் தமிழ்ச் சமூகக் கதவு​களைத் திறந்​து, தன் புனை​வாற்​றலுடன் படைத்த மிகச்​சிறந்த சிறுகதைகளுள் ஒன்று ‘ஊமைச் செந்​நாய்’.

கதைக்​களம்: மேற்​குத் தொடர்ச்சி மலைப்​பகு​திக்கு அதி​காரி​யாக வரும் வில்​சன் துரைக்​கு, சமையல்​காரன் தோமா​வும், ‘ஊமைச்​செந்​நாய்’ என்​றழைக்​கப்​படும் பழங்​குடி இளைஞனும் பணி​விடை செய்​கின்​றனர். கரிய நிற​மும், செந்​நா​யின் சிவந்த கண்​களும் கொண்ட அந்த இளைஞன், ப்ளெட்​சர் துரை​யால் அவன் தாய் சீரழிக்​கப்​பட்​ட​தால் பிறந்​தவன்; இதனால் அவனது கண்​கள் மட்​டும் வெள்​ளை​யர்​களின் சாயலில் இருக்​கின்​றன. காட்​டில் உலவும் பிரம்​மாண்​ட​மான கரிய கொம்​பன் யானையை வேட்​டை​யாடத் துணி​யும் வில்​சன், காட்டை நன்கு அறிந்த ஊமைச்​செந்​நாயை வழி​காட்​டி​யாக்​கிக் கொள்​கிறான். இந்த வேட்​டைப் பயணத்​தின் ஊடே, வெள்​ளை​யர்​கள் மலைமக்​களை நாச​மாக்​கியதை​யும், அவர்​களின் வெறுப்​பின் குரூரத்​தை​யும் விவரிப்​பதே இக்​கதை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in