மனோபாவத்தின் வழித்தடம் | கதை அறியும் கலை

மனோபாவத்தின் வழித்தடம் | கதை அறியும் கலை
Updated on
2 min read

எழுத்​தாளர் சுஜா​தா​வின் புனைகதை உலகம் வாசகனை சட்​டென்று தன்​வயப்​படுத்​தும் வித்​தையைத் தாராள​மாகக் கொண்​டது. வாசிப்​பில் எதிர்​பா​ராத ஒரு திகைப்​புச் சுவையைத் தரவேண்​டும் என்ற நோக்​கம் மேலோங்கி எழுதப்​பட்ட அவரது கதைகள், முடிவு சார்ந்து வாசகன் யூகிக்க முடி​யாத திடீர் திருப்​பங்​களைக் கொண்​ட​வை. ஆனால், கதை​யின் சுவாரஸ்​யத்​துக்​காகக் கணக்​குப்​போட்டு வைக்​கப்​படும் இத்​தகைய அதிரடி முடிவு​கள், சில நேரங்​களில் கதை​யின் இயல்​பான உயிரோட்​டத்​துக்​கும் பாத்​திரங்​களின் மனோநிலைக்​கும் நே​ரெ​தி​ராகப் போய்​விடு​வதும் உண்​டு.

அவரது ‘முரண்’ என்ற கதை இதற்கு ஒரு சிறந்த உதா​ரணம். பள்​ளிக் குழந்​தைகளுக்​காக 25 ஆண்​டு​கள் நேர்​மை​யுடன் வாக​னம் ஓட்​டிய குமார​சாமி, நிர்​வாகத்​தின் பாராட்​டு​தலை​யும் சக ஆசிரியர்​களின் அங்​கீ​காரத்​தை​யும் பெறுகிறார். பணி ஓய்​வு​பெறும் நாளில் அவரின் அர்ப்​பணிப்​பான சேவையைப் பாராட்டி பள்ளி நிர்​வாகம் அவருக்கு சிறப்பு செய்​கிறது. எனினும் நிர்​வாகம் வழங்​கிய பணத்தை பெற்​றுக்​கொள்ள மறுக்​கிறார். அச்​செயல் பள்​ளி​யின் ஆசிரியர்​கள், மற்ற பணி​யாளர்​களிடம் அவரின் மதிப்பை உயர்த்​துகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in