கலைவசமாகும் விமர்சனம் | கதை அறியும் கலை

கலைவசமாகும் விமர்சனம் | கதை அறியும் கலை

Published on

சமூகச் சீர்​கேடு​களைச் சுட்​டிக்​காட்​டும் எழுத்து வடிவ​மாக கதை எழுது​வதைப் பயன்​படுத்​திக் கொண்​ட​வர் அறிஞர் அண்​ணா. இந்த நேரடி விமர்​சனங்​களைக் கலை குணத்​தோடு ஏற்று வெளிப்​பட்ட ஒரு நல்ல கதை ‘சொர்க்​கத்​தில் நரகம்’.

தேவலோகப் பதவியை அடை​யும் பொருட்டு கடும் தவத்​தில் இருக்​கிறார் விசு​வாமித்​திரர். அவரது தவத்​தைக் கலைத்​து,அவரது தலை​மைத்​துவ ஆசையை நிர்​மூல​மாக்க வேண்​டும் என்ற நோக்​கில் மேனகையை அனுப்​பு​கின்​றனர். தனக்கு இடப்​பட்ட கட்​டளையை ஏற்று, காட்​டில் தவமிருக்​கும் விசு​வாமித்​திரர் முன் வரு​கிறாள் மேனகை. வனப்பு மிக்க மேனகை​யின் கவர்ச்​சி​யான நாட்​டி​யத்​தில் தன்னை இழக்​கிறார் விசு​வாமித்​திரர். அதனால் மேனகைக்கு ஒரு பெண் குழந்​தை​யும் பிறக்​கிறாள். விசு​வாமித்​திரரை வீழ்த்த வேண்​டும் என்ற நோக்​கில் வந்த வேலை முடிந்​தது. சொர்க்​கத்​துக்கு மன வருத்​தத்​துடன் திரும்​பு​கிறாள் மேனகை. இது​தான் கதை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in