சிறுகதை என்பது கண்டடைதல் | கதை அறியும் கலை

சிறுகதை என்பது கண்டடைதல் | கதை அறியும் கலை
Updated on
2 min read

சமூக உறவு​களின் சாதக பாதகங்​களை, அதன் உன்​னதங்​களை மற்​றும் பலவீனங்​களை உயிர்த்​துடிப்​புடன் அள்ளி இணைத்​த​படியே மனிதர்​களின் இதயங்​களைத் திறந்து காட்​டிய​வர் கு.அழகிரி​சாமி. மனித வாழ்​வின் எளிய பக்​கங்​களில் இருந்து உன்​னத​மான உண்​மை​களைக் கண்​டறிவதே சிறுகதை என்​ப​தைத் தன் எழுத்​துகளால் நிரூபித்​தவர் அவர்.

இரு​வர் கண்ட ஒரே கனவு: அழகிரி​சாமி​யின் ‘இரு​வர் கண்ட ஒரே கனவு’ என்ற கதை, வறுமை​யில் வாழும் இளம் விதவை​யான வெள்​ளை​யம்​மாளின் கதையைக் கூறுகிறது. ஆறு வயதும் ஐந்து வயது​மான இரு ஆண் குழந்​தைகளு​டன், மாடு கட்​டும் கொட்​டிலின் ஓரத்​தில் ஒரு தட்​டியை மறைத்து வாழும் அவளுக்​கு, எழவோ பேசவோ முடி​யாத அளவு நோய்மை சூழ்​கிறது.

அவள் குளிர் காய்ச்​சலால் கூலி வேலைக்​குப் போக முடி​யாமல் முடங்​கிக் கிடக்​கிறாள். உடம்பு சரி​யாக இருந்​தா​லும் அவளால் வெளியே போயிருக்க முடி​யாது, ஏனெனில் அவளிடம் உடுத்​திக் கொள்​ளத் தகுந்த துணி இல்​லை. அந்த ஊரில் வேலை கிடைக்​கும் நாட்​களில் கூட, நாலைந்து விதவை​கள் துணி​யில்​லாமல் வீட்டை அடைத்​துக்​கொண்டு அரைப்​பட்​டினியோ முழுப்​பட்​டினியோ கிடப்​பது சகஜ​மாக இருக்​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in