

அழகான ஓர் இளைஞனையோ, ஒரு குமரியையோ பார்த்ததும் “எவ்வளவு லட்சணமாக, திருத்தமாக, நேர்த்தியாக இருக்கிறார்கள்!” என்று வியக்கிறோம் அல்லவா?
எழுத்துக்கு இத்தகைய லட்சணத்தைக் கொண்டு வந்தவர் சுந்தர ராமசாமி. அவரது ‘கோலம்’ என்ற சிறுகதையை இதற்குச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். அதிக உரையாடல்கள் இன்றி, வெறும் காட்சிகளாலேயே ஒரு முழுமையான வாழ்க்கைச் சித்திரத்தை இந்தக் கதையில் அவர் செதுக்கியிருக்கிறார்.