புதுமையும் பழமையும் | கதை அறியும் கலை

புதுமையும் பழமையும் | கதை அறியும் கலை
Updated on
2 min read

கணத்துக்​குக் கணம் மாறும் மனித எண்​ணங்​களின் ஆழமான குகைக்​குள் லாவக​மாக நுழைந்​து, பாத்​திரங்​களின் மனச்​சலனங்​களை எவ்​வித ஒளிவுமறைவுமின்றி அப்​பட்​ட​மாகச் சித்​தரிப்​பவர் எழுத்​தாளர் ஆதவன். தன்​னைத் தற்​காத்​துக்​கொள்ள முயலும் மனிதர்​களின் நுட்​ப​மான பாவனை​களை ஆதவன் காட்​டிய அளவுக்​குத் தமிழில் வேறெந்​தப் படைப்​பாளி​யும் இத்​தனை நெருக்​க​மாகக் காட்​டிய​தில்​லை.

குறிப்​பாக, அவரது ‘கார்த்​திக்’ கதை​யில் வெளிப்​படும் கவித்​து​வத் தருணங்​கள், மற்ற சிறந்த கதைகளை விட​வும் மேலோங்கி நிற்​கின்​றன. அகத்​தின் அழகை​யும் புறத்​தின் அழகை​யும் ஒருசேரக் கோத்​து, ஒரு முழு​மை​யான கலைப்​படைப்பை இந்​தக் கதை​யில் அவர் உரு​வாக்​கி​யிருக்​கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in