எளியோரின் வலிமை​யான சித்திரங்​கள் | கதை அறியும் கலை

எளியோரின் வலிமை​யான சித்திரங்​கள் | கதை அறியும் கலை
Updated on
2 min read

எவரை​யும் தீவிர தாக்​கத்​துக்கு உள்​ளாக்​கு​வதே சிறந்த ஆக்​கக்​கலை. அந்​தத் தாக்​கத்​தின் பாதிப்​பு, உண்​மைத்​தன்மை என்ற அம்​சத்​தின் இழைகளால் உள்ளே புதைந்​திருப்​ப​தில் இருந்து உரு​வாகிறது. பணம் இல்​லாதவர்​களுக்​கும் ரசனை இருக்​கிறது. ஆசை இருக்​கிறது. அத்​தோடு கடுமை​யான வாழ்க்​கைப் பிரச்​சினை இருக்​கிறது என்​ப​தெல்​லாம் வெகுஇயல்​பாகக் கூடி உரு​வான கதை​தான் வண்​ணநில​வனின் ‘கரை​யும் உரு​வங்​கள்.’

சங்​கர் படித்​தவன். வேலை அமை​யாமல் அலைக்​கழிகிறான். நண்​பர்​களை, பெற்​றோர்​களை எதிர்​கொள்ள முடிவ​தில்​லை. ‘ராதை​யின் நெஞ்​சமே...’ பாடல் ஒலிக்​கும்​போது நின்று முழு​தாகக் கேட்​பவன், இன்று கேட்​காமல் நடக்​கிறான். சாக்​கடையைத் தாண்​டும்​போது பழைய செருப்​பின் வார் அறுந்​து​விடு​கிறது. கையில் பிடித்து நடக்​கிறான். நாளைக்​குத் தைத்​துக்​கொள்​ளலாம் என்று அவனுக்கு தோன்றுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in