​முள் வலைக்குள் விரியும் உலகம் | கதை அறியும் கலை

​முள் வலைக்குள் விரியும் உலகம் | கதை அறியும் கலை
Updated on
2 min read

அ.முத்துலிங்கத்துக்குப் பல நாடுகளில் தங்கி வேலை செய்யும் நல்வாய்ப்பு அமைந்தது. அதனை தன் படைப்புகளுக்கு மிகப்பெரிய சாதகமாக ஆக்கிக் கொண்டார். பண்பாட்டுப் பின்னலின் இறுக்கத்தின் ஊடே சொல்லமுடியாத வேதனை இருந்து கொண்டிருப்பதை ‘யதேச்சை’ என்ற ஆப்கானிஸ்தான் பின்னணி கதையில் படைத்துக் காட்டியிருக்கிறார்.

ரஸீமாவின் குழந்தைப் பருவத்துத் தோழன் காசிம். 11 வயதில் முக்​காடு​போட்​டப் பின் இவர்​கள் நட்​புக்கு இடமில்​லாமல் போகிறது. 13 வயதில் ரஸீ​மாவை அஹமத்​துக்கு மணம் முடித்​து​வைக்​கின்​றனர். 5 வயதாகும் அஹமத்​தின் தம்பி நியாஸை தன் பிள்​ளை​போல தூக்கி வைத்து விளை​யாடு​கிறாள். கண்ணி வெடி​யில் சிக்க அஹமத் இறந்​து​போகிறான். ரஸீமா 15 வயதில் விதவை ஆகிறாள்.

கணவனின் தம்பி நியாஸுக்கு 18 ஆண்​டு​கள் முடிய 13 ஆண்​டு​கள் காத்​திருக்​கவேண்​டும். அவனைத்​தான் திரு​மணம் செய்​து​கொள்ள வேண்​டும். தாலி​பான்​களின் கெடு​பிடிகளில் மக்​கள் இருக்​கிறார்​கள். 9 வயதுக்​குமேல் பெண்​கள் படிக்​கக்​கூ​டாது. வேலைக்​குச் செல்​லக்​கூ​டாது. உடலை ‘சாதர்’ துணி​யால் மூடிக்​கொள்ள வேண்​டும். இப்​பின்​னணியி​லான கதை​தான் ‘யதேச்​சை.’

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in