

புராண இதிகாச வளங்களின் செழுமை நமக்கு அதிகம். ஒரு படைப்பாளி அதில் தோயத்தோய அதிலிருந்தே கற்பனையின் வீச்சுக்கள் எழுகின்றன. அவ்வகையில் நமக்குக் கிடைத்திருக்கும் கதை, த.நா.குமாரசாமி எழுதிய ‘ஸ்ரீசைலம்’ என்ற சிறுகதை.
வெகுகாலத்திற்கு முன்பு ஸ்ரீசைலத்தைத் தரிசிக்க தந்தையும் மகளும் வருகின்றனர். யாத்திரையில் மகளுக்கு எந்தத் தொந்தரவும் வரக்கூடாது என்பதற்காக ஆண்உடை அணிவித்து பார்வதிநாதனாக அழைத்து வருகிறார். பல நாட்கள் நடந்துவந்த தந்தை முட்புதரும் அடர்ந்த கொடிகளும் பின்னிய காட்டின் ஏற்றத்தில் ஏற, முடியாமல் விழுந்து விடுகிறார்.