போரையும் உணவுத் தேவையையும் சமாளிப்பது சாத்தியமா?

போரையும் உணவுத் தேவையையும் சமாளிப்பது சாத்தியமா?
Updated on
2 min read

இந்திய அரசிடம் உள்ள பழமையான துறைகளில் ஒன்று உணவுத் துறை. மத்திய உணவு - பொது விநியோகத் துறையானது, இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு - பொது விநியோக அமைச்சகத்தின்கீழ் இயங்குகிறது. இந்தத் துறை இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் மிக அவசரமாக உருவாக்கப்பட்டது. போரின் தொடக்க நிலையில், இந்தியாவில் உணவுக்கென்று தனித் துறை இருந்திருக்கவில்லை.

ஆகவே, இப்போர்க் காலக்கட்டத்திலும் போர் முடிவுற்று உலகம் அமைதிக்குத் திரும்பிய பிறகும் இந்தியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது.

எனினும், பர்மா (மயன்மார்), மலேசியா, ஆஸ்திரேலியா நாடுகளில் இத்தகைய பஞ்சம் ஏற்படவில்லை. இவ்வளவுக்கும் பெருமளவில் உழவர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தது. உணவுப்பொருள்கள் கையிருப்பில் சென்னை மாகாணம் ஓரளவு தன்னிறைவு பெற்றிருந்தது.

இதைக் காரணமாகக் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஜெர்மனி, இத்தாலி நாடுகளின் போர்க் கைதிகளை சென்னை மாகாணச் சிறைகளில் அடைத்தனர். நேசநாடுகளின் போர் வீரர்களுக்கு இந்தியாவிலிருந்து உணவுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தப் போக்குக்கு எதிராக இந்தியர்கள் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

உணவுப் பொருள் சட்டம்

பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் உணவுப் பொருள் தட்டுப்பாட்டைப் போக்க ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது. இதன்படி, இந்தியாவில் அனைத்து உணவுப் பொருள்களின் விலையையும் 10% அளவுக்கு உயர்த்துவது; உணவுப் பொருள்களின் விலை, தேவை, இருப்பு, வேளாண் நிலங்கள், தரிசு நிலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புள்ளிவிவரங்களை ‘அரிசி வர்த்தகம்’ என்கிற பெயரின்கீழ் கொண்டுவருவது என வரையறுக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தை அச்சு நூலாக பிரிட்டிஷ் இந்திய அரசு வெளியிட்டது. இந்நூல் தரும் தகவலின்படி, அன்றைய காலக்கட்டத்தில் இந்தியா முழுமைக்கும் தேவைப்பட்ட அரிசி 270 லட்சம் டன். விளைச்சல் 245 லட்சம் டன். பற்றாக்குறை 25 லட்சம் டன். பற்றாக்குறை அரிசி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in