கழிப்பறைக்கு நிலத்தடி நீர் அவசியமா?

ஒவ்வொரு நகரமும் கழிவுநீரைக் கழிவாகப் பார்க்காமல், மறுபயன்பாட்டுக்கான வளமாகக் கருத வேண்டும்
கழிப்பறைக்கு நிலத்தடி நீர் அவசியமா?
Updated on: 
3 min read

பாதுகாப்பான கழிப்பறைகள் பெண்கள், குழந்தைகளின் உடல்நலம், பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடையவை. பள்ளி, பணியிடம், பொது இடம் என அனைத்திலும் பெண்கள் தடையின்றிப் பங்கேற்க நம்பகமான சுகாதாரக் கட்டமைப்பும் தொடர்ந்து நீர் கிடைப்பதும் அவசியம். ஆனால், இதற்குக் குடிநீருக்கான நிலத்தடி நீரையே பயன்படுத்த வேண்டுமா என்பது குறித்தும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

சேமிப்பின் அவசியம்: மத்தியப் புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) நிலையான வளர்ச்சி இலக்குகள் – முன்னேற்ற அறிக்கை 2025இன்படி, இந்தியாவின் தனிநபர் சராசரி ஆண்டு நீர் இருப்பு 2024இல் 1,449 கன மீட்டராகவும், 2025இல் 1,520 கன மீட்டராகவும் பதிவாகியுள்ளது.

ஆண்டுக்கு 1,700 கன மீட்டருக்குக் குறைவான நீர் இருப்பு நீர் நெருக்கடி (Stress) நிலையாகவும், 1,000 கன மீட்டருக்குக் குறைவானது நீர் பற்றாக்குறை நிலையாகவும் கருதப்படுகிறது. இவை தேசிய சராசரி மதிப்பீடுகளே தவிர, தனிநபருக்கு நேரடியாகக் கிடைக்கும் நீரின் அளவு அல்ல. எனவே, நீரைச் சேமிப்பதுடன் பயன்படுத்திய நீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதும் அவசியம்.

வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கழிப்பறை ‘ஃபிளஷ்’ (Flush) பயன்பாட்டுக்குக் கணிசமான நீர் செலவிடப்படுகிறது. ஒருவர் நாளொன்றுக்கு நான்கு முதல் ஐந்து முறை கழிப்பறையைப் பயன்படுத்துகிறார் என்றும், ஒவ்வொரு முறையும் சராசரியாக ஆறு லிட்டர் நீர் தேவைப்படுகிறது என்றும் வைத்துக்கொண்டால், ஒருவருக்கு நாளொன்றுக்கு 24 முதல் 30 லிட்டர் தேவைப்படும்.

கழிப்பறையின் வகையைப் பொறுத்து இந்த அளவு மாறலாம். இதன்படி, 10 லட்சம் பேர் வசிக்கும் நகரத்தில் நாளொன்றுக்கு 2.4 கோடி முதல் 3 கோடி லிட்டர் நீர் ஃபிளஷ் பயன்பாட்டுக்குச் செலவாகிறது. குளிப்பதற்கான நீர் இதில் சேர்க்கப்படவில்லை. எனவே, இந்தத் தேவையை உரிய தரத்தில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மூலம் பூர்த்திசெய்வது குறிப்பிடத்தக்க நீர்ச் சேமிப்பு வாய்ப்பாகும்.

Loading content, please wait...

X