தமிழுக்கான முன்னெடுப்புகள்

தமிழுக்கான முன்னெடுப்புகள்
Updated on: 
1 min read

வரலாற்​றில் பல சம்​பவங்​களின் தோற்​றக் கதைகள் மீது நாம் கவனம் கொள்​வ​தில்​லை. அவற்​றின் விளைவு​களை மட்​டுமே சிலாகித்​துக்கொண்​டிருக்​கிறோம். அப்​படித் தமிழ்ச் சூழலில் நமக்கு அதி​கம் தெரிந்​தி​ராத அல்​லது நாம் கவனிக்​கத் தவறிய சில நிகழ்​வு​களை, தமிழ்​நாடு முற்​போக்கு எழுத்​தாளர் சங்​கத்​தின் சென்னை மாவட்​டச் செய​லா​ள​ராக, மாநிலத் தலை​வ​ராகத் தான் முன்​னெடுத்த செயற்​பாடு​களை நினை​வு​கூர்ந்​திருக்​கிறார் சிகரம் ச.செந்​தில்​நாதன்.

தலைப்​புக்​கேற்​ற​வாறு மொழி சார்ந்​தும் இலக்​கி​யம் சார்ந்​தும் நடை​பெற்ற போராட்​டங்​களே இதில் பதிவு செய்​யப்​பட்​டிருக்​கின்​றன. சாகித்ய அகாதமி​யின் அமைப்​புச் சிக்​கல்​கள் தொடங்​கி, கீழ்​வெண்​மணி படு​கொலை பற்​றிய இந்​திரா பார்த்​த​சா​ர​தி​யின் ‘குரு​திப்​புனல்’ நாவல் மீதான மாற்​றுப் பார்​வை, தமிழைப் பயிற்று மொழி​யாக்​க​வும் ஆட்சி மொழி​யாக்​க​வும் நடத்​தப்​பட்ட மாநாடு​கள், எம்​.ஜி.ஆர் ஆட்​சிக்​காலத்​தில் திரைப்​படங்​கள் மீதான தணிக்​கை, ராஜம் கிருஷ்ணன் நூல்​கள் நாட்​டுடைமை​யானது, இடது​சா​ரி​களின் கூட்​டங்​களில் பார​தி​தாசன் படம் இடம்​பெற்​றது, கோயில்​களில் தமிழ் வழி​பாட்டு மொழி என்ற கோரிக்கை என்பன உள்​ளிட்ட தானும் தான் வழிநடத்​திய இயக்​க​மும் முன்​னெடுத்த பல்​வேறு போ​ராட்​டங்​களைத் தக்க ஆவணங்​களோடு பதிவு செய்​திருக்​கிறார்​ ஆசிரியர்.

------------------------------------------------------------------

இலக்​கியப் போராட்​டங்​கள்

சிகரம் ச.செந்​தில்​நாதன்

சந்​தியா பதிப்​பகம், விலை: ரூ.220

தொடர்​புக்​கு: 98409 52919

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in