

வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலை, மாணவர் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மொடாப் சிக்தர் துப்பாக்கியால் சுடப்பட்டது போன்ற சம்பவங்களால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. கூடவே, இந்து இளைஞர் படுகொலை, இந்தியாவுக்கு எதிரான மனநிலை அதிகரிப்பு என இந்தியாவுக்கும் இந்தப் பிரச்சினையின் தீவிரம் எட்டியிருக்கிறது.
வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் சந்ததியினருக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதைக் கண்டித்து மாணவர்கள், இளைஞர்கள் கடந்த ஆண்டு போராட்டத்தில் இறங்கினர்.
போராட்டங்கள் வலுப்பெற்றபோது ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு அதை அடக்க முற்பட்டது. போராட்டம் தீவிரமடைந்ததால் ஆட்சி கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி அங்கு அமைக்கப்பட்டது.