

சக மனிதர்கள் மீது அன்பும், சமூகப் பிரச்சினைகளைத் தம் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதிக் கவலைப்படும் மனோபாவமும் கொண்டவர்களிடம் இருந்து மட்டுமே, கருணை மிகுந்த எழுத்துகள் வெளிப்படும். டாக்டர் ஆர்.கார்த்திகேயன் தாம் வாழும் சமூகத்தை எந்த அளவு நேசிக்கிறார் என்பதற்கு அவரது எழுத்துகளே சாட்சி.
தனி மனிதர்களும், இந்த ஒட்டுமொத்தச் சமூகமும் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் சிக்கல்களை அலசி ஆராய்ந்து, அறிவியல்பூர்வமான தீர்வுகளை முன்வைக்கக் கூடிய மிக வீரியமான எழுத்துகளுக்கு சொந்தக்காரர் இவர்.
அந்த வகையில், மனித வளம் குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். மனித வளம் பற்றிப் பேசக்கூடிய இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்திலும், மனிதநேயமே மிஞ்சி நிற்பதைக் காணலாம்.
மனித வள மேம்பாடு
டாக்டர் ஆர்.கார்த்திகேயன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.200
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562