போலிச் செய்திகளைக் கண்டறிவதும் களைவதும் எப்படி?

போலிச் செய்திகள் உண்மையான செய்திகளைவிட ஆறு மடங்கு வேகமாகப் பரவுகின்றன
போலிச் செய்திகளைக் கண்டறிவதும் களைவதும் எப்படி?
Updated on
3 min read

அண்மையில், வட இந்தியாவில் ஒரு கும்பல் ஊர் ஊராகச் சென்று குழந்தைகளைக் கடத்திக்கொண்டு போவதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி, மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் துலே என்கிற ஊரில் நான்கு முதியவர்கள் இங்கும் அங்குமாகச் சுற்றிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

இதைக் கண்ட மக்கள் இவர்கள் குழந்தைகளைக் கடத்திச்செல்லத்தான் வந்திருக்கிறார்கள் என்று தவறாகக் கருதிக் கல்லால் அடித்துக் கொன்றுவிட்டார்கள். உண்மையில் அந்த முதியவர்கள் பிச்சை எடுக்க வந்தவர்கள். சமூக ஊடகங்களில் பரவிய குழந்தைத் திருட்டு என்கிற செய்தியும் உண்மையல்ல, அது வதந்தி என்று பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in