வரலாறு என்னும் விளிம்பு - காலத்தின் தூரிகை 19

வரலாற்றின் போதாமைகளையும் ஆராய்வது முக்கியம் என்கிறார் ரணஜித் குஹா
வரலாறு என்னும் விளிம்பு - காலத்தின் தூரிகை 19
Updated on
3 min read

மானிட அறிவை விரிவுபடுத்தும் முக்கியமான ஒரு துறை வரலாறு. ஒரு பேரரசின் எழுச்சியை, குறிப்பிட்ட ஓர் ஆட்சிக் காலத்தை, ஒரு புரட்சியை, ஓர் அழிவைப் புரிந்துகொள்வதற்கான கருவிகளை வரலாறு நமக்கு அளிக்கிறது.

ஆனால், பெரிய நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்த அளவுக்கு சிறியனவற்றை நம்மால் புரிந்துகொள்ள முடியுமா? எடுத்துக்காட்டுக்கு, 19ஆம் நூற்றாண்டு உலகை அல்லது இந்தியாவை அல்லது வங்கத்தைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒருவருக்கு வரலாற்றால் 100 நூல்களைப் பரிந்துரைக்க முடியும்.

ஆனால், அதே வங்கத்தில் வாழ்ந்து, உயிர்விட்ட சந்திராவைப் பற்றிக் கேட்டால் தயங்கித் தயங்கிச் சில காகிதங்களை மட்டுமே வரலாற்றால் அளிக்க முடியும். அக்காகிதங்களைக் கொண்டு சந்திராவின் வாழ்க்கையைக் கட்டமைக்க இயலவில்லை. இது வரலாற்றின் மிகப்பெரும் போதாமை என்கிறார் ரணஜித் குஹா (1923-2023).

கடந்த காலத்தை ஆராய்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் வரலாற்றின் போதாமைகளையும் ஆராய்வது. எங்கெல்லாம் வரலாறு ஒளி பாய்ச்சுகிறது என்பதை மட்டுமல்ல, ஏன் பல பகுதிகளை இன்னமும் அது இருளிலேயே வைத்திருக்கிறது என்பதையும் சேர்த்தே நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்பது குஹாவின் நிலைப்பாடு.

அதனால் பெரியனவற்றைக் கடந்து ‘சிறிய’ விஷயங்கள்மீது கவனத்தைக் குவித்தார் அவர். அதையே தன் ஆய்வுப் பரப்பாகவும் வகுத்துக்கொண்டார்.

ரணஜித் குஹா யார்? அவரை ஏன் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்? அவருடைய பார்வை எத்தகையது? வரலாற்றுத் துறையை அவர் எவ்வாறு செழுமைப்படுத்தினார்? இக்கேள்விகளுக்கு அவர் எழுதிய ‘சந்திராவின் மரணம்’ (1987) என்னும் சிறு கட்டுரை ஓரளவுக்குப் பதிலளிக்கக்கூடும்.

வங்காளத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 19ஆம் நூற்றாண்டு மத்தியில் வாழ்ந்த ஓர் இளம் பெண் சந்திரா. பக்டி என்னும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். கணவரை இழந்தவர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in