அறிவுக் களஞ்சியம் | பென்னிங்டன் 150

அறிவுக் களஞ்சியம் | பென்னிங்டன் 150
Updated on
2 min read

தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள ஒரு மாவட்டத்தில் இயங்கிவரும் நூலகம் ஒன்று, அதனுடைய 150ஆவது ஆண்டு விழாவை அமைதியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூரில் இயங்கும் தனியார் நூலகமான பென்னிங்டன் நூலகம்தான் அது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மதராஸ் இலக்கியச் சங்க நூலகத்துக்குப் பிறகு, தமிழ்நாட்டின் இரண்டாவது பழமையான நூலகம் இது.

பெரும் பங்களிப்பு: ஆங்கிலேயர் ஆட்சியில் திருவில்​லிபுத்தூர் அப்போதைய பிரிக்​கப்படாத திருநெல்வேலி மாவட்​டத்தின் ஒரு பகுதியாக இருந்த​போது, அம்மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ஜே.பி.பென்னிங்டன். தீவிர வாசிப்பு உடைய பென்னிங்டன், ஓய்வுக்குப் பின்னரும் தொடர்ந்து எழுத்துப் பணியில் ஈடுபட்டு வந்தார்.

உப்பு வரி, சுதேசியம், வருமான வரி உள்ளிட்ட பல்வேறு தலைப்​பிலான இவரது கட்டுரைகள் ‘ஸ்பெக்​டேட்​டர்’, ‘ஹிந்து பேட்ரி​யாட்’ உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்துள்ளன.

பென்னிங்டன் காந்தி​யடிகளுக்கு ஜலியான் வாலாபாக் படுகொலை குறித்து எழுதிய கடிதத்​துக்கு, காந்தி தனது ‘யங் இந்தியா’ இதழில் விடையளித்​துள்ளார் (29.09.1920). மாவட்​டத்தின் நீராதாரம் சார்ந்த வளர்ச்சிப் பணிகளிலும் இவருடைய பங்களிப்பு இருந்தது. இவ்வளவு பங்களிப்பு​களைச் செய்துள்ள இவருடைய புகைப்படம் இன்றள​விலும் கிடைக்​காதது சோகம்.

இந்நூலகம் தொடங்கு​வதற்கு பென்னிங்டன் அளித்த பேராதரவின் காரணமாக அவருடைய பெயரே நூலகத்​துக்குச் சூட்டப்​பட்டது. அதேபோல, தொடக்​கத்தில் இருந்தே மாவட்​டத்தின் ஆட்சியர் பொறுப்பில் இருப்பவர் இந்த நூலகத்தின் அலுவல்​வழித் தலைவராக (ex-officio president) இருந்து​வரு​கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in