மீண்டும் கிராம சபை: நிறைவேறுமா எதிர்பார்ப்புகள்?

நாளை நடக்கவிருக்கும் கிராம சபை பல்வேறு வகைகளில் முக்கியமானது
மீண்டும் கிராம சபை: நிறைவேறுமா எதிர்பார்ப்புகள்?
Updated on
3 min read

ஏறக்குறைய ஏழு மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டின் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை (ஆகஸ்ட் 15) கிராம சபை கூட உள்ளது. கடந்த ஜனவரி 26, 2026 அன்று கூடிய கிராம சபையே தமிழ்நாட்டில் கடைசியாக நடைபெற்ற கிராம சபைக் கூட்டம். அதனால்தான் நாளை நடக்கவிருக்கும் கிராம சபைக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

கூட்டப்பொருள்கள்

கிராம அளவிலான திட்டங்கள், செயல்பாடுகள், பிரச்சினைகளைப் பற்றிக் கிராம சபை உறுப்பினர்களான கிராம மக்களுடன் விரிவாக இதில் விவாதிக்கப்படும். ஆகஸ்ட் 15 கிராம சபையில் என்னென்ன பொருள்களில் விவாதிக்கப்பட வேண்டும் என்கிற கூட்டப்பொருள்கள் அடங்கிய பட்டியலை (agenda) அரசு வெளியிட்டுள்ளது.

சட்டப்படி ஊராட்சி மன்றங்களால் தயாரிக்கப்பட வேண்டிய இந்தக் கூட்டப்பொருள்கள் தமிழ்நாட்டில் மாநில அரசால் மட்டுமே இதுவரை தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வருகிறது. அவற்றில் முக்கியமானவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

இந்தக் கூட்டப்பொருள்களில் முதல் பொருளே செலவின அறிக்கைதான். வரும் கிராம சபையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து

ஊராட்சிகளிலும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை செலவு செய்த செலவினங்கள் கொண்ட படிவம் 30ஐக் கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும்.

மே 1, 2022இல் இந்தப் படிவத்தைப் பெரிய பதாகையில் (flex banner) அச்சிட்டு விளம்பரப்படுத்த வேண்டும் என்று முந்தைய அரசு அறிவுறுத்தியிருந்தது; அரசின் திட்டங்களைச் சொல்லும் முதல்வரின் உரையும் அக்டோபர் 2, 2023 கிராம சபையில் ஒளிபரப்பப்பட்டது.

ஊராட்சிகளின் அதிகாரத்தில் தலையிடும் இந்தச் செயல்பாடுகள் பின்பு அரசால் கைவிடப்பட்டன. நாளைய கிராம சபையில் படிவம் 30 முறைப்படி மக்களுக்கு அளிக்கப்பட்டு, படித்துக் காண்பிக்கப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தப்பட்டு, மக்களிடம் ஒப்புதல் வாங்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மூன்றாவது கூட்டப்பொருளாகிய தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மிகவும் முக்கியமானது. ‘விபி-ஜி ராம் ஜி’ (VB-G RAM G) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ் நடந்த வேலைகள், செலவுகள் பற்றியும் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

மேலும் 2026-27இன் தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தின் (labour budget) கீழ் பணிகளின் பட்டியலைத் (shelf of projects) தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. அதாவது, 2026-27இல் இத்திட்டத்தின் கீழ், 125 நாள்கள் என்னென்ன வேலைகளைச் செய்யப் போகிறோம் என்பதை இந்தக் கிராம சபைதான் முடிவு செய்யப்போகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in