கடனின்றி அமையாது அரசு

வீண் செலவுகள், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் போதிய பணம் இல்லாத நிலையை உருவாக்கும
கடனின்றி அமையாது அரசு
Updated on: 
3 min read

எல்லாம் வல்லது அரசு என்கிற எண்ணம் நம்மில் பலருக்கும் உண்டு. அதனால், அரசிடம் நாம் எதிர்பார்ப்பதும் அதிகம். அது உண்மையா? அரசு எல்லாம் வல்லதா? இந்தக் கேள்விக்கு ‘இல்லை’ என்பதே பதில்.

அரசின் வல்லமைக்கு எல்லை உண்டு. அந்த எல்லை, அரசு தனக்குத் தேவையான பணத்தைத் திரட்டும் வழிவகைகளுக்கு உட்பட்டது; நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது; தனி மனிதர்களைப் போல் தார்மிக அடிப்படையிலான ஒழுக்கத்துக்கு உட்பட்டது.

அரசு ஏற்கெனவே தாம் செய்து கொண்டிருக்கின்ற வேலைகளைத் திறம்படச் செய்யலாம்; மேம்படுத்தலாம்; தனது வல்லமையைக் காட்டலாம். புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால் நிறையப் பணம் தேவைப்படுகிறது. அதனைத் தனது வருவாயைப் பெருக்குவதன் மூலம் பெறலாம் அல்லது கடன் மூலம் பெறலாம்.

ஒரு மாநில அரசைப் பொறுத்தவரை வருவாயைப் பெருக்கும் வழிகள் மிகக் குறைவே. ஏனென்றால், பெரும்பகுதி வருவாயை அளிக்கும் பொருள் - சேவை வரி சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தனிப்பட்ட மாநில அரசுகளின் கையில் இல்லை.

மத்திய அரசுக்கு இருப்பதுபோல் பொதுத் துறை நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி ஆகியவற்றில் இருந்து பெறப்படும் லாபப் பங்கு போன்ற வருவாய் வாய்ப்புகள் மாநில அரசுகளுக்கு மிக மிகக் குறைவே. கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்.

நிதியின் முக்கியத்துவம்

தமிழக அரசு தனது வருவாயைப் பெருக்க நியமித்துள்ள குழுவின் வழிகாட்டுதலின்படி, அதிகபட்சமாக ரூ.15,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என்று திட்டமிட்டுள்ளது. இது ஒரு பெரிய தொகை என்றாலும் அரசின் ஒட்டுமொத்தத் தேவையைக் கருத்தில் கொள்ளும்போது, இன்னும் நிறையப் பணம் தேவைப்படுகிறது.

மேலும், வீண் செலவுகளைத் தவிர்த்துக் கூடுதலாகப் பணத்தைத் திரட்டலாம். ஏற்கெனவே உள்ள செலவினங்களைக் குறைத்து அதில் மிஞ்சும் பணத்தைப் புதிய திட்டங்களுக்குச் செலவிடலாம். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால், பல செலவுகளைக் குறைக்க இயலாது.

Loading content, please wait...

X