சில முன்னேற்றங்கள், பல ஏமாற்றங்கள் | கற்றதும் பெற்றதும் 2025

சில முன்னேற்றங்கள், பல ஏமாற்றங்கள் | கற்றதும் பெற்றதும் 2025
Updated on
3 min read

காலநிலை மாற்றமும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் அதிகரித்துவரும் சூழலில் ஒவ்வோர் ஆண்டும் முக்கியமான முடிவுகளை எடுத்துச் செயல்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மனித இனம் இருக்கிறது. அந்த வகையில், 2025இல் என்னென்ன செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன, அவை முழுமையானவையா?

ஐ.நா. பெருங்கடல் மாநாடு: ஐ.நா. அவையின் பெருங்கடல் மாநாடு 2025 ஜூன் மாதம் நடைபெற்றது. 60க்கும் மேற்பட்ட தலைவர்கள், 15,000 பங்கேற்​பாளர்கள் கலந்து​கொண்ட இம்மா​நாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்​கப்​பட்டன. கடல் சூழலியல் பாதுகாப்பு, கடல் அறிவியலுக்காக 1 பில்லியன் யூரோ (ஏறக்​குறைய ரூ,1,068 கோடி) நிதி உதவி தருவதாக ஐரோப்பிய ஆணையம் அறிவித்தது.

உலகின் மிகப்​பெரிய கடல் பாதுகாப்புப் பகுதியைத் தமது கடற்பகு​தியில் ஏற்படுத்த இருப்பதாக பிரெஞ்சு பாலினேசியத் தலைவர்கள் அறிவித்​தனர். கடலுக்கு அடியில் ஏற்படும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்​படுத்து​வதற்கான ‘அமைதியான கடல்’ என்கிற முக்கிய ஒப்பந்​தத்தில் 37 நாடுகள் கையெழுத்​திட்டன. 2030க்குள் கடல், நிலம் உள்ளிட்ட 30% புவிப்​பரப்பைப் பாதுகாப்​ப​தற்கான ஒப்பந்தம் மீண்டும் உறுதிப்​படுத்​தப்​பட்டது.

வணிகச் செயல்​பாடுகள்: அழிந்து​வரக்​கூடிய உயிரினங்கள் சார்ந்த வணிகத்​துக்கான சர்வதேச ஒப்பந்​தத்தின் 20ஆவது உச்சி மாநாடு உஸ்பெகிஸ்​தானில் நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்த மாநாடு இரண்டு அல்லது மூன்று வருடங்​களுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் என்பதா​லும், இந்தக் கால அவகாசத்​துக்குள் உயிரி​களின் நிலை பற்றிய புதிய தரவுகள் வந்து​விடும் என்பதாலும் மிகப்​பெரிய எதிர்​பார்ப்பு இருந்தது.

150 நாடுகள் கலந்து​கொண்ட இந்த மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்​கப்​பட்டன. பல ஆசியப் பூனை இனங்கள், சுறாக்கள், திருக்கை மீன்கள் ஆகியவை உள்ளிட்ட 77 இனங்கள் பட்டியலில் சேர்க்​கப்​பட்​டிருக்​கின்றன. இவற்றின் பாதுகாப்பு உறுதி செய்யப்​பட்​டிருக்​கிறது. இதுபோன்ற செயல்​பாடு​களுக்கான நிதியும் 7% உயர்த்​தப்​பட்​டிருக்​கிறது. இதில் குறிப்பாக, சுறா போன்ற குருத்​தெலும்பு மீன் இனங்கள் சார்ந்த பாதுகாப்பு மிகப்​பெரிய வெற்றி​யாகப் பார்க்​கப்​படு​கிறது.

காலநிலை உச்சி மாநாடு: காலநிலை மாற்றத்​துக்கான 30ஆவது உச்சி மாநாடு பிரேசிலில் நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்த ஆண்டும் எதிர்​பார்த்​ததைப் போலவே மாநாட்டில் பெரிய, முக்கிய முடிவுகள் எதுவும் எட்டப்​பட​வில்லை. காலநிலை மாற்றத்​துக்கு மறுப்​பாளரான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தாக்கம் இந்த மாநாட்டில் அதிகமாக இருந்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in