‘முதல்’வர்களின் தோல்விகள்

‘முதல்’வர்களின் தோல்விகள்
Updated on
3 min read

சுயேச்சைகளைக் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன மக்களின் வாக்கு என்கிற ஆயுதம் முக்கியத் தலைவர்களைக்கூட வீழ்த்தியிருக்கிறது. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முதலமைச்சராகத் தேர்தலை எதிர்கொண்டு தோல்வியடைந்தவர் ஜெ.ஜெயலலிதா.

1991இல் பர்கூர், காங்கேயம் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்ற ஜெயலலிதா, பர்கூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டார். காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

1996 சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக ஆட்சி மீது அதிருப்தி அலை வீசியது. முதல்வராக இருந்த ஜெயலலிதா அந்தத் தேர்தலில் ஏற்கெனவே வென்ற பர்கூர் தொகுதியில் மீண்டும் போட்டி​யிட்​டார். அந்தத் தேர்தலில் திமுகவின் எஸ்.ஜி.சுகவனத்​திடம் தோல்வியடைந்​தார்.

அந்த வகையில் முதல்​வ​ராகத் தேர்தலை எதிர்​கொண்டு ஒரு தொகுதியில் தோல்வியடைந்​தவர், ஜெயலலிதா. தமிழகத்தில் 9 ஆண்டுகள் முதல்வராக இருந்த கு.காமராஜர், 1967 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் பெ.சீனி​வாசன் என்கிற இளைஞரிடம் 1,285 வாக்குகள் வித்தி​யாசத்தில் தோல்வியடைந்​தார்.

1969இல் அண்ணா மறைந்த பின்னர், 1987இல் எம்ஜிஆர் மறைந்த பின்னர் என இரண்டு முறை தற்காலிக முதல்​வ​ராகப் பதவி வகித்த இரா.நெடுஞ்​செழியன், 1989 சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாள​ராகப் போட்டி​யிட்டு, மூன்று இலக்கத்தில் வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்​தார்.

இதே தொகுதியில் சுயேச்​சை​யாகப் போட்டி​யிட்ட நடிகர் எஸ்.வி.சேகர், நெடுஞ்​செழிய​னைவிட அதிக வாக்குகள் பெற்றது அந்தக் காலக்​கட்​டத்தில் பேசுபொருளானது. முந்தைய தேர்தலில் தோல்வியடைந்​தவர்கள், பின்னாளில் முதல்வரான வரலாறும் உண்டு.

இன்றைய முதல்வர் மு.க.ஸ்​டாலின் 1984, 1991ஆம் ஆண்டு​களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்​களில் ஆயிரம்​விளக்கு தொகுதியில் தோல்வியடைந்​தார். 1996, 2006இல் எடப்பாடி தொகுதியில் போட்டி​யிட்டு எடப்பாடி பழனிசாமி தோல்வியடைந்​தார்.

தேர்தல்​களில் தோல்வி அடைந்​திருந்​தாலும் ஸ்டாலின், பழனிசாமி பின்னாள்களில் முதல்வ ரானார்கள். 2024 மக்களவைத் தேர்தலில் ராமநாத​புரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம் போட்டி​யிட்டுத் தோல்வியடைந்​ததும் கவனிக்​கத்​தக்கது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in