மொழியியலே கணினிப் பயன்பாட்டுக்கு அடிப்படை! - மொழியியல் அறிஞர் கி. அரங்கன்

கருத்துப் பேழை சந்திப்பு
மொழியியலே கணினிப் பயன்பாட்டுக்கு அடிப்படை! - மொழியியல் அறிஞர் கி. அரங்கன்
Updated on
2 min read

மொழியியல் (linguistics) அறிஞரான கி.அரங்கன், மொழியின் கட்டமைப்பை ஆராய்கிற மாற்றிலக்கணத் துறையில் (transformation grammar) இன்றியமையாத பங்களிப்புகளைச் செய்தவர்; இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய பல நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடங்களாக இடம்பெற்றுள்ளன.

1982இல் தமிழுக்கெனவே பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது, அதற்கு அடித்தளம் அமைத்த பேராசிரியர்களில் இவரும் ஒருவர். தற்போது தஞ்சாவூரில் வசிக்கும் அரங்கனுக்கு 83 வயது. அவரிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:

Q

மொழியியலும் அதன் ஒரு பகுதியான மாற்றிலக்கணமும் உங்களுக்கு எப்படி அறிமுகமாகின?

A

பேராசிரியர் தெ.பொ.மீ​னாட்​சிசுந்​தரத்தின் ஆய்வுகள் மொழியியலில் எனக்கு ஆர்வத்தைத் தூண்டின. எனக்குக் கற்பித்த பேராசிரியர்களான வ.அய்.சுப்​பிரமணியம், ச.அகத்​தி​யலிங்கம், செ.வை.சண்முகம் போன்றோரும் எனது ஈடுபாட்டுக்குக் காரணம். மாற்றிலக்கணம் 1957இல் பேராசிரியர் நோம் சோம்ஸ்கி மூலம் உலகுக்கு அறிமுக​மானது.

மனித நேயம், மனிதரின் படைப்பாற்றலோடு அவரது மொழிக்​கொள்கை பின்னிப்​பிணைந்துள்ளது. நான் 1976இல் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் வருகைதரு அறிவிய​லா​ளராகச் சேர்ந்தேன்.

அங்கு சோம்ஸ்கியிடம் மூன்று மாதங்களுக்கு மாற்றிலக்கணம் பயின்றேன். வேதிப் பொறியியலிலிருந்து மொழியியலுக்கு வந்தவர் பேராசிரியர் ராபர்ட் பி.லீஸ். அவர் சோம்ஸ்கியின் வழிகாட்டலில் முனைவர் பட்டம் முடித்தவர். சோம்ஸ்கியை விட வயதில் மூத்தவர்; மாணவர்களின் மனங்கொள்​ளும்​வகையில் பாடம் நடத்துவார். அவரிடமும் பயின்றேன்.

பிற்காலத்தில் நான் மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தில் பணிபுரிந்தேன். தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்​பட்டபோது, அதன் முதல் துணைவேந்தரான வ.அய்.சுப்​பிரமணியம் மூலம் அதில் சேர எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழ்ப் பல்கலைக்​கழகத்தின் மொழியியல் துறையின் முதல் பேராசிரியர் ஆனேன்.

Q

தமிழகத்தில் மொழியியல் அறிமுகமாகிற காலக்கட்டத்தில் அதில் பணிபுரிந்த சூழலைக் கூற முடியுமா?

A

அந்தக் காலத்தில் தமிழ்த் துறை என்றால் இலக்கிய ஆராய்ச்சி என்றே அறியப்​பட்​டிருந்தது. பேச்சுவடிவத்தைவிட, எழுத்து வடிவமே உயர்ந்தது என்கிற மனநிலை நிலவியது. இதனால் மொழியியல் குறைத்து மதிப்பிடப்​பட்டது.

பேச்சுவழக்கு குறித்த ஆய்வு, மொழியியலில் முக்கியமான அங்கம். வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பதும் படிக்கக் கடினமானது என்கிற கருத்தும் மொழியியலுக்கு இன்றும் தடையாக உள்ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in