எல்லாம் ஏஐ மயம்! | கற்றதும் பெற்றதும் 2025

எல்லாம் ஏஐ மயம்! | கற்றதும் பெற்றதும் 2025
Updated on
3 min read

தொழில்நுட்ப உலகைப் பொறுத்தவரை 2025ஆம் ஆண்டை எப்படி வரையறுப்பது என்பது சிக்கலானதாகவும், சவாலானதாகவும் மட்டுமல்ல, சுவாரசியமானதாகவும் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவுதான் இந்த ஆண்டின் மிகப் பெரிய பேசுபொருள்.

அசர​வைத்த நுட்பங்கள்: சில ஆண்டு​களுக்கு முன் சாட்ஜிபிடி அறிமுக​மானதைத் தொடர்ந்து வீசத் தொடங்கிய ‘ஜென் ஏஐ’ அலை இந்த ஆண்டும் தொடர்ந்தது. ‘ஏஜென்டிக் ஏஐ’ (Agentic AI) என்னும் கருத்​தாக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்​தியது. ஜென் ஏஐ சேவைகளை இயக்கும் மொழிமா​திரிகள் சார்ந்த அடுத்தகட்ட சேவையான ஏஜென்டிக் ஏஐ, மனிதத் தலையீடு இல்லாமல் தானாகச் செயல்களை நிறைவேற்றும் ஆற்றலைக் குறிக்​கிறது.

பயணச்​சீட்டு முன்பதிவு செய்வதில் தொடங்கி, இணைய வணிகத் தளத்தில் பொருள்களை ஆர்டர் செய்வதுவரை நிறைவேற்றும் ஆற்றல் கொண்ட இந்த நுட்பம், வர்த்தக நிறுவனச் செயல்​பாடு​களிலும் ஆதிக்கம் செலுத்தும் எனக் கூறப்​படு​கிறது. ஏஜென்டிக் ஏஐ போலவே இந்த ஆண்டு பெரிதும் பேசப்பட்ட இன்னொரு அம்சம், ‘வைப் கோடிங்’.

செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு நிரலாக்கம் செய்வதை இது குறிக்​கிறது. ஏஐ என்ன செய்ய வேண்டும் என பிராம்ப்டிங் (Prompting) செய்தால் அதற்கேற்ப உள்ளடக்​கத்தை உருவாக்கித் தரப்படு​வதைப் போலவே, கோடிங் பரப்பிலும் செயல்​படக்​கூடிய சேவைகள் கவனத்தை ஈர்த்தன. கோடிங் தெரியா​விட்​டாலும்கூட, ஏஐ சேவைகளைக் கொண்டு செயலிகளை உருவாக்​கலாம் என்னும் கருத்து தாக்கத்தை ஏற்படுத்​தியது.

இன்னொரு பக்கம் பார்த்​தால், காமெட் (Comet) போன்ற ஏஐ பிரவுசர்கள் அறிமுகமாகி ஏஐ அலையின் இன்னொரு கிளையாக அமைந்தன. ஏஐ தேடியந்​திரம் அறிமுகம் செய்த இந்த பிரவுசர், உரையாடல் தன்மையைக் கொண்டிருந்​ததோடு, பயனாளிகள் சார்பில் செயல்​படும் திறனையும் பெற்றிருந்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in