

எரிக் ஹாப்ஸ்பாக்
மருதன்
கிழக்கு பதிப்பகம்
விலை ரூ.250
தொடர்புக்கு: 94459 79797
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மார்க்ஸிய வரலாற்றாசிரியர், பிரிட்டனைச் சேர்ந்த எரிக் ஹாப்ஸ்பாம். வரலாறு அணுகப்படும் முறையை மாற்றியமைத்தவர்களுள் முக்கியமானவர். அவரது இந்திய பயணங்களும், சிந்தனைகளும் இந்தியர்களுக்கு அவரை நெருக்கமாக்கியிருக்கின்றன. 95 ஆண்டுகள் வாழ்ந்த ஹாப்ஸ்பாம் மார்க்ஸியம், சமூக வரலாறு, பொருளாதாரம், தொழிலாளர் இயக்கம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆய்வு செய்து, காத்திரமான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்.
இந்த நூல், ஹாப்ஸ்பாம் குறித்த அறிமுகத்தை முதல் பகுதியில் வழங்குகிறது. அவர் எழுதிய புகழ்பெற்ற ‘கால நூல்’ வரிசையில் இடம்பெறும் நான்கு நூல்களைப் பற்றி இரண்டாம் பகுதி அறிமுகம் செய்கிறது. ‘மார்ஸியமும் வரலாறும்’ எனும் மூன்றாவது பகுதியில் கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, வரலாற்றுத் துறையில் மார்க்ஸ் இன்றுவரை செலுத்திவரும் தாக்கம், ரஷ்யப் புரட்சி, லெனினின் பங்களிப்புகள் குறித்தும் ஹாப்ஸ்பாமின் ஸ்டாலின் ஆதரவு நிலைபாடு குறித்தும் அலசுகிறது.