ஒன்றுக்குள் ஐம்பது

ஒன்றுக்குள் ஐம்பது
Updated on
1 min read

‘கற்​றலிற் கேட்​டலே நன்​று’ என்​கிறது பழமொழி நானூறு. வள்​ளுவரும் ‘கேள்​விச் செல்​வம்’ குறித்​துப் பதிவுசெய்​திருக்​கிறார். ஒரு நூலை நாமே கற்​றுத் தெரிந்​து​கொள்​வதை​விடக் கற்​றறிந்​தோர் சொல்​லக் கேட்​பது இனிமை.

அந்த இனிமை​யை, ‘என் பல்​வண்​ணக்​ காட்​சிக்​கரு​வி’ நூலின் மூலம் கையளிக்​கிறார் இறையன்​பு. தான் வாசித்​துக்​கொண்​டிருக்​கும் நூல்​களை ஏற்​கெனவே வாசித்த நூல்​களின் பின்​னணி​யில் எழுத விரும்பி அவற்​றுள் 50 கட்​டுரைகளைத் தொகுத்து நூலாகத் தந்​திருக்​கிறார்.

இறையன்​பு​வின் வாசிப்பு நேர்​வரிசை​யில் அமை​யாமல் பரந்​துபட்​ட​தாக இருக்​கிறது. கலை, இலக்​கி​யம், பண்​பாடு, வரலாறு, தத்​து​வம், மருத்​து​வம், சூழலியல், விவ​சா​யம், காலநிலை, திரைத்​துறை எனப் பலவகை​யான நூல்​களை​யும் வாசித்​திருக்​கிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in