வாழக் கற்றுத் தருவதே கல்வி!

வாழக் கற்றுத் தருவதே கல்வி!
Updated on
2 min read

இந்தியாவில் 2023ஆம் ஆண்டில் மட்டும் 13,892 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர் என இந்தியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) சொல்லும் தரவுகள் நம்மை உறைய வைக்கின்றன.

இது வெறுமனே புள்ளிவிவரம் அல்ல; இந்தியக் கல்வி முறையின் மீது விழுந்த ஒரு கறை. ‘வாழச் சொல்லித் தராத கல்வி, கல்வியே அல்ல’ என்ற தத்துவத்தை உரக்கச் சொல்லும் வகையில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு ஒரு புதிய விடியலை ஏற்படுத்தியுள்ளது.

நிறுவனரீதியான மாற்றம்

‘அமித் குமார் எதிர் இந்திய ஒன்றியம்’ என்கிற வழக்கில் நீதியரசர்கள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை 2026 ஜனவரி 15 அன்று வழங்கியது. மாணவர்களின் தற்கொலையை ஒரு தனிப்பட்ட மனநலப் பிரச்சினை என்று கடந்து செல்லாமல், அது கல்வி ‘நிறுவனங்களின் தோல்வி’ (Institutional Failure) என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மூலம் உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்பது முக்கிய வழிகாட்டுதல்களை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது கட்டளைகள் என்று இதைக் குறிப்பிடலாம்.

ஒவ்வொரு கல்லூரி வளாகத்திலும் ரகசியத்தைப் பேணக்கூடிய ‘மனநல - நல்வாழ்வு மையங்கள்’ (MHWBC) கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். மாணவர்களின் மன அழுத்தத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய அதிகாரபூர்வக் கண்காணிப்புக் குழுக்கள் தேவை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in