நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பக்குவம் நம்மிடம் இருக்கிறதா?

வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என நமது பொறுப்பற்ற வாழ்க்கைமுறைக்குச் சமாதானம் சொல்லிக்கொள்கிறோம்
நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பக்குவம் நம்மிடம் இருக்கிறதா?
Updated on: 
3 min read

இடர்கள் அல்லது பேரிடர்கள் என்றால், பொதுவாக நாம் சுனாமி, புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களுடன் இணைத்துப் பார்க்கிறோம். அண்மைக் கால அனுபவத்தின் வழியாக கரோனா நோய்த்தொற்றுக் காலத்தின் படிப்பினைகள் நமக்குத் தெரியவந்தன.

அவையன்றி, ஒவ்வொரு மனிதரும் அன்றாடம் தனிவாழ்வில், திடீர் உடல்நலக் குறைவு, பொருளாதார இழப்பு முதல் எதிர்பாரா விபத்துவரை சந்திக்க நேரிடும் இடர்கள் எதுவாகவும் இருக்கலாம். அப்படியான தருணங்களில் தங்களை மீட்டெடுக்கும் முன்தயாரிப்புடனும் உணர்திறனுடனும் நம்மில் எத்தனை பேர் இயங்குகிறோம்?

விழிப்புணர்வு இருக்கிறதா?

ஆதார், பான் (PAN), குடும்ப அட்டை போன்ற நம்மைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை எப்போதும் பயன்படுத்தக்கூடிய தயார்நிலையில் எத்தனை பேர் தொகுத்து வைத்திருக்கிறோம்? குழந்தைகள், பெரியவர்களின் மருத்துவ விவரங்களை, நமது மருத்துவக் காப்பீட்டு ஆவணங்களைத் தயார் நிலையில் எல்லோரும் வைத்திருக்கிறோமா? இத்தனைக்கும் இந்த விவரங்களையெல்லாம் ஒழுங்குபடுத்தி உடனடியாகப் பயன்படுத்தும் நிலையில் சேமித்து வைப்பதற்கான தொழில்நுட்ப வாய்ப்புகளும் வசதிகளும் ஏராளம். பாமரர்களுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை என்பது இருக்கட்டும்.

படித்து வேலையில் இருப்பவர்களில் எத்தனை பேர் இத்தகைய விழிப்புடன் இருக்கிறார்கள்? வரும்போது பார்த்துக்கொள்ளலாம், விதிப்படி எல்லாம் நடக்கும் என்றெல்லாம் நமது பொறுப்பற்ற வாழ்க்கைமுறைக்கான சமாதானங்களை எப்போதும் கையில் வைத்திருக்கிறோம்.

நாளையோ அல்லது என்றோ ஒரு நாள் நடக்கப்போவதை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப நம்மை ஆயத்தமாக வைத்துக்கொள்வது நடைமுறையில் சாத்தியமில்லை என்பது பெரும்பான்மையினரின் கருத்தாக இருக்கலாம்.

ஆனால், நமது வாழ்வின் உறுதியான முன்னேற்றம், எப்போதும் உரிய அடிப்படைத் திறன்களுடன் நாம் இருக்கிறோமா என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. நாம் என்பது நாம் மட்டுமல்ல... நாம் சார்ந்த மனிதர்கள், சமூகம் என அடுத்தடுத்த வட்டங்களிலும் அதன் பலன் விரியும்.

உறவு தந்த பலம்

அன்றாட இடர்களைச் சில வேளைகளில் நாம் தனியாக எதிர்கொள்ளலாம். சில விஷயங்களில் அப்படி இருப்பதே சரி. ஆனால், பொதுவில் அப்படியான இடர்களை எல்லா வேளைகளிலும் நாம் மட்டுமே தனித்து எதிர்கொள்வது சாத்தியமில்லை. குடும்ப உறவு, நண்பர்கள் என்று தொடர்புச் சங்கிலியின் நம்பகத்தன்மையும் நீளமும் சேர்ந்து இடர்களிலிருந்து நம்மைக் குறைந்த இழப்புடன் விரைவில் மீட்டெடுக்க உதவுகிறது.

Loading content, please wait...

X