சமூக நீதித் துறை: சரிதானா பெயர் மாற்றம்?

ஜனநாயக வெளிக்குள்தான் மாற்றத்துக்கான கருத்துகளும் அதை ஒட்டிய முடிவுகளும் வந்துசேர வேண்டும்
சமூக நீதித் துறை: சரிதானா பெயர் மாற்றம்?
Updated on
2 min read

தமிழக அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத் துறை அதிகாரபூர்வமாக சமூக நீதித் துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமூக நீதித் துறை அமைச்சராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு பொறுப்பேற்றுள்ளார். ஆதிதிராவிடர் மக்களின் கல்வி, சமூக-பொருளாதார மேம்பாட்டை உறுதிசெய்வதே இத்துறையின் முக்கிய நோக்கம். ஆனால், இந்தப் பெயர் மாற்றம் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்னும் கேள்வி எழுந்திருக்கிறது.

பழைய வரலாறு:

தமிழகத்தில் திராவிடம் என்கிற சொல் கால்டுவெல் பாதிரியாரால் அடையாளப்படுத்தப்பட்டது. அதுவரை சம்ஸ்கிருதம்தான் பண்பாட்டின் மூலம் என்று நிலவிய கருத்தை கால்டுவெல் ஆய்வு தடுத்து நிறுத்தியது. திராவிடம் என்பது வேறொரு பண்பாடு; அதற்கும் சம்ஸ்கிருதத்துக்கும் தொடர்பு இல்லை என்று அந்த ஆய்வு சொன்னது. திராவிடப் பண்பாட்டின் தொடக்க மக்களாக தொதவர் பழங்குடியினர், பறையர், பள்ளர், மாலா, மாதிகா, புலையர், சாணார் முதலான சாதிகளை கால்டுவெல் அடையாளப்படுத்தினார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in